Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள்: 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி -1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘குவலயானந்தம்’ என்னும் நூல்……….. இலக்கணத்தை மட்டுமே கூறும்.
(அ) எழுத்திலக்கணம்
(ஆ) சொல்
(இ) யாப்பு
(ஈ) அணி
Answer:
(ஈ) அணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 2.
ஆணும் பென்னும் ஓருயிரின் தலைகள் என்றெழுது ‘ என தம்பிக்கு எழுதிய கவிஞர் ……….
(அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
(இ) மேத்தா
(ஈ) அப்துல் ரகுமான்
Answer:
(அ) பாரதியார்

Question 3.
அய்யப்ப மாதவன்………… கோட்டையைச் சேர்ந்தவர்.
(அ) வஞ்சிக்
(ஆ) நாட்டரசன்
(இ நாலுவாசல்
(ஈ) தேவ
Answer:
(ஆ) நாட்டரசன்

Question 4.
ஆங்கிலத்தில் இருந்த நீதி மன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர்.
(அ) நீதிபதி கிருஷ்ணய்யர்
(ஆ) நீதிபதி சோமநாதன்
(இ) மாயூரம் வேதநாயகம்
(ஈ) நீதிபதி இஸ்மாயில்
Answer:
(இ) மாயூரம் வேதநாயகம்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 5.
திருமணம் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பது…..
(அ) மணந்தகம்
(ஆ) பிறந்தகம்
(இ) புகுந்தகம்
(ஈ) வளர்ந்தகம்
Answer:
(அ) மணந்தகம்

Question 6.
நான்கு முதல் பன்னிரண்டு வரை அடிவரையறை உடைய பாவகை…………. ஆகும்.
(அ) குறள் வெண்பா
(ஆ) பஃறொடை வெண்பா
(இ) கலிவெண்பா
(ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
(ஆ) பஃறொடை வெண்பா

Question 7.
புறம் என்றும் புறப்பாட்டு என்றும் அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது…….
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) தேவாரம்
(ஈ) கலித்தொகை
Answer:
(ஆ) புறநானூறு

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 8.
வெகுளி என்பதன் பொருள்……….
(அ) கோபம்
(ஆ) வியப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) பெருமை
Answer:
(அ) கோபம்

Question 9.
‘திண்ணியர்’ என்பதன் பொருள் தருக.
(அ) அறிவினார்
(ஆ) மன உறுதியுடையவர்
(இ) அறிவிலார்
(ஈ) தீக்காய்வார்
Answer:
(ஆ) மன உறுதியுடையவர்

Question 10.
வேளாண் மேலாண்மை என்பது ….
கூற்று 1: சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல்.
கூற்று 2 : நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
(அ) கூற்று 1, 2 சரி
(ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
(இ) கூற்று 1 சரி, 2 தவறு
(ஈ) கூற்று 1, 2 தவறு
Answer:
(அ) கூற்று 1, 2 சரி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 11.
கிறிஸ்துவமும் தமிழும்’ என்னும் நூலை எழுதியவர்……….
(அ) மீனாட்சி
(ஆ) மயிலையார்
(இ) பாரதியார்
(ஈ) திரு. வி.க
Answer:
(ஆ) மயிலையார்

Question 12.
தெய்வமணிமாலை திருவருட்பாவில்……….. திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
(அ) இரண்டாம்
(ஆ) மூன்றாம்
(இ) நான்காம்
(ஈ) ஐந்தாம்
Answer:
(ஈ) ஐந்தாம்

Question 13.
பெருந்தோள் மடந்தை என்பவள் ……….
(அ) மாதவி
(ஆ) மாதிரி
(இ) கண்ண கி
(ஈ) மணிமேகலை
Answer:
(அ) மாதவி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 14.
நடிகர் திலகத்துக்கு சிவாஜி எனப் பெயர் சூட்டியவர்………….
(அ) அண்ணா
(ஆ) வீரமணி
(இ) பெரியார்
(ஈ) எம். ஜி. ஆர்.
Answer:
(இ) பெரியார்

பகுதி – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பிறகொரு நாள் கோடை என்னும் தலைப்பில் எழுதிய ஆசிரியர் யார்? அவரைப் பற்றிய குறிப்பு தருக.
Answer:
இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்.

இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர், இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன் , நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

Question 16.
வேடுவதலைவன் குகனிடம் இராமன் கூறியது என்ன?
Answer:
வேடுவ தலைவன் குகனிடம் இராமன், நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். மேலும் நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன் என்று கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 17.
எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:
கலைத் தொழிலில் வல்லவராய் இருப்பவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிட்டும் என்று ஒளவையார் கூறுகிறார்.

Question 18.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:
குழலின் வழியே யாழிசை நின்றது. யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது. தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது. முழவுடன் இடக்கை வாத்தியம் கூடி நின்று ஒலித்தது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்கியது எது?
Answer:
ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி.

வேங்கடசாமி. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

Question 20.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிருட்டும்? சான்று தருக
Answer:
பின்னனி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை பின்னணி இசைச் சேர்ப்பும், சில வேளைகளில் மவுனமும் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன. நமக்குப் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக இருக்க வேண்டும்.

அதே போல மவுனம், உரையாடலைவிட அதிகம் பேசுவதாக இருக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 21.
எழுத்தாணி எத்தனை வகைப்படும் அவை யாவை?
Answer:
எழுத்தாணி மூன்று வகைப்படும். அவை

  • மடக்கெழுத்தாணி,
  • வாரெழுத்தாணி,
  • குண்டெழுத்தாணி

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வருவான் (ஆ) எழுகின்றாள்
(அ) வருவான் = வா (வரு) + வ் + ஆன்
Answer:
வா – பகுதி ; வரு – விகாரம் வ் – எதிர்கால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

(ஆ) எழுகின்றாள் = எழுது – கின்று – ஆள்
Answer:
எழுது – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
(அ) யாரையும் (ஆ) காய்நெல்
(அ) யாரையும் – முற்றும்மை
(ஆ) காய்நெல் – வினைத்தொகை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகளின் ஒலி கேட்டு புலிக்குட்டிகள் களிப்புற்றன.
Answer:
வண்டுகளின் முரலல் கேட்டுப் புலிப்பரள்கள் களிப்புற்றன.

Question 25.
சொல்லைச் சேர்த்தும், பிரித்தும் தொடரமைக்க கண்டதைக் கற்க
Answer:
கண்டதைக் கற்க : திருக்குறளில் கண்டதைக் கற்க மேன்மைதான். கண்டு அத கற்க : சிறந்த நூல்களைக் கண்டு அதைக் கற்பாயாக! 26. கொச்சைச் சொற்களைத் திருத்துக.

எத்தினி நபா சொன்னாலும் படிப்புல கவனத்தைக் காணோம்.

எத்தனை முறை சொன்னாலும் படிப்பில் கவனத்தைக் காணவில்லை.

Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வியே!
(ஆ) சைவ சமயத்தின் தலைமைக் கடவுள் சிவபெருமான்.
(அ) கொடுக்கக் கொடுக்க குறையாத செல்வம் எது?
(ஆ) சிவபெருமான் எந்த சமயத்தில் தலைமைக் கடவுள்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
கலை – களை
வயலில் களை பறித்தவர்கள் கூலியைப் பெற்றுக் கொண்டதும் கலைந்து சென்றனர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 29.
வல்லின மெய்களைத் தேவையற்ற இடங்களில் நீக்கி எழுதுக.
Answer:
தான் பார்த்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்னத் தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

தான் பார்த்த பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்ன தந்தையிடம் கோபப்பட்டான் மகன்.

Question 30.
வடமொழி நீக்கித் தனித்தமிழில் எழுதுக.
சுபமுகூர்த்தம் கூடிய நாளில் திருக்கோவிலில் கும்பாபிஷேக வைபவம் நடந்தது.
Answer:
நல்ல நேரம் கூடிய நாளில் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:

  • அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே.
  • குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே, அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே
  • ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்.
  • பொய் பேசாதிருக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்.
  • மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்.
  • துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்.
  • ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். எச். ஏ. கிருட்டிணனார் பாடி இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம் :
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக
Answer:
இனநிரை = இனம் + நிரை மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள்.
  • சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

Question 36.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக ஒலிக்கோலங்கள்
Answer:

  • எல்லாத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
  • மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே.
என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க,த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள்.
  • பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
மணந்தகம் என்றால் என்ன?
Answer:

  • வாழ்க்கை என்னும் நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும்.
  • மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ”மணந்தகம்” எனப்படுகிறது.
  • முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

39. நெய்தல் திணையை உதாரணத்துடன் விவரி. (அல்லது) தலைமகன் பாங்கற்கு உரைத்த கூற்றை விவரி.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்:
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று: இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை: இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம் :
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்” என வரைவு (மணஞ் செய்து கொள்வது தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்ல து)

தலைமகன் பாங்கனுக்கு உரைத்த கூற்றை விவரி.

கூற்று:
பாங்கனிடம் தலைமகன் கூறியது.
(எ.கா) அம்மூவனார் எழுதிய பெருங்கடல் வேட்டத்து சிறுகுடிப் பரதவர்’ என்று துவங்கும் அகநானூற்றுப் பாடல்

விளக்கம் :
வண்டியை இழுக்கும் ‘எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதனால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு உரியவன் நீயே’ என்று பாங்கனிடம் நெய்தல் நிலத்தலைமகன் தன் காதல் நிறைவேற உதவுமாறு கூறினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 40.
இல்பொருள் உவமையணி அல்லது மடக்கணியை தகுந்த குறட்பாவுடன் பொருத்திக் காட்டுக.
Answer:
அணி விளக்கம் :
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக்கிக் கூறுதல் இல்பொருள் உவமையணி’ ஆகும். உலகில் இயல்பாக நடக்காத நிகழ்ச்சியை உவமையாகக் கூறுவதும் இதில் அடங்கும்.

(எ.கா) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விளக்கம் :
பாலைவனத்தில் நீரின்றி வற்றிப்போன மரமானது மீண்டும் தளிர்த்தல் என்பது இல்லாத நடக்காத நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது மனதில் அன்பு இல்லாதவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது இல்பொருள் உவமையணி’ எனப்படும். (இல்பொருள் – உலகில் இல்லாத பொருள்)

(அல்லது)

மடக்கணி :
அணி விளக்கம்:
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.

(எ.கா) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை, அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள்
தருகிறது. எனவே, இது மடக்கணி’ எனப்படும்.

Question 41.
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன். இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான்.

ஒருநாள் கல்லூரிக்கு வரும் பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான். தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

(அல்ல து)

பின்வரும் உரைபத்தியை படித்து அதன் கருத்து மாறாமல் மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக. சிக்கனமாய் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அப்படியானால் நல்ல உணவு, சிறந்த ஆடை மற்றும் தேவையான பொருள்கள் முதலியவற்றுக்குப் போதிய அளவு செலவு செய்யாமல் வாழ்வதா? அற்றன்று.

நோய் வந்துவிட்டால் அதைத் தீர்ப்பதற்கு மருத்துவச் செலவு செய்யாமலிருப்பதா? அதுவும் அன்று தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான இன்றியமையாத செலவுகளைச் செய்யத்தான் வேண்டும். தேவைக்குச் செலவிட்டது போக எஞ்சிய வருவாயில் எதிர்கால வாழ்க்கைக்குச் சேர்த்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளல் வேண்டும்.

எறும்பு மழைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைக் கோடைக் காலத்திலேயே தேடி வைத்துக்கொள்கிறது அன்றோ?

அதுபோல நாமும், உழைக்கவும் ஊதியம் மிகுதியாகத் தேடவும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சேர்த்துவைக்க முயலுதல் வேண்டும். எதிர்காலப் பாதுகாப்பு மிக்க வாழ்க்கையின் பொருட்டாவது சிக்கனமாக வாழும் பயிற்சியை மேற்கொள்ளுதல் வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், சிறுகச் சிறுகச் சேமித்தாலே பெரும்பொருள் சேமித்துவிடலாம். சிக்கனமாக வாழ்வோம், சிறப்புடன் வாழ்வோம்.

திருந்தாப் படிவம்:
சிக்கனமாய் வாழ்வதற்குச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். நல்ல உணவு, அழகிய ஆடைகள், தேவைப்படும் பொருள்கள், மருத்துவச் செலவு போன்றவற்றுக்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து எஞ்சிய வருவாயில் சேமிக்கும் பழக்கம் கொள்ளுதல் வேண்டும்.

மழைக்கால உணவைக் கோடைக்காலத்திலேயே சேமித்து வைக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கும் பழக்கம் கொண்டால் பெரும்பொருள் சேர்க்கலாம். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு

திருந்திய படிவம்:
சிறுதுளி பெருவெள்ளம் உணவு, உடை, மருத்துவம் போன்றவற்றிற்கும் தனக்கும் குடும்பத்திற்கும் இன்றியமையாச் செலவுகளைச் செய்து, பின் எஞ்சியுள்ள பொருளைச் சேமித்து வைத்தல் வேண்டும். மழைக்காலத்திற்குத் தேவையான உணவைக் கோடையில் சேமிக்கும் எறும்பு போல, நாமும் வாய்ப்பும் வலிமையும் இருக்கும் போதே உழைத்துப் பொருள் தேடி எதிர்கால நல்வாழ்வுக்குச் சேமித்தல் வேண்டும். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

  • கொடுக்கப்பட்ட சொற்கள் – 99
  • மூன்றில் ஒரு பங்கு – 99/3 = 33
  • திருந்தாப் படிவம் – 45
  • திருந்திய படிவம் – 36

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக
Answer:
1. Covet all lose all.
2. Think before you act.
3. Honesty is the best policy.
4. A penny saved is a penny gained.
1. பேராசை பெருநட்டம்
2. சிந்தித்துச் செயல்படு/எண்ணித் துணிக கருமம்
3. நேர்மையே சிறந்த கொள்கை
4. சிறுதுளி பெருவெள்ளம்

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
அம்மா (அல்லது) வழிகாட்டி
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • ”ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை, மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
    அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 44.
ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி :
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள்.

அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான். கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.

நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.

வெண்கொற்றக்குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக் கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.

முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக் கோலைக் கொடுக்கும்.

அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்த பின், அத்தலைக் கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல் :
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம் அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள்.

ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து தலைக்கோலி என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் பரிசு இவ்வளவு என நூல் விதித்த முறைப்படி ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம் :
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி.

பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சி பெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள் நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள் :

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம். தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும் ‘ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு. தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபு வழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
  • நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம். களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
  • தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார்.
  • இப்பணியின் விளைவாக. சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை :

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
  • வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
  • ‘செந்தமிழ்ச் செல்வி என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
  • அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன் முதலாக வழங்கப்பட்டவை.
  • இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள்.
  • வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்ல து)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம். கூட்டம். பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  2. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம் , திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம் ‘, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து. தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண்மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
னிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்க நிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • சாலை விதிகள்
  • கணக்கீடு
  • சாலைக்குறியீடு
  • மோட்டார் வாகனச் சட்டம்
  • முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம் அதிலும் சாலை வழிப்பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துக்களும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள் :

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படுத்தும் குறியீடுகள் மற்றும்.
  • போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு :
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகளைக் கவனத்தில் கொண்டு பயணித்தால் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்கக் கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும்.
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(ஆ) கோடை மழை கதையை நாடக வடிவில் எழுதுக.
Answer:
கோடை மழை
– சாந்தா தத்

பங்கேற்போர் : பெரியவர் ஆறுமுகம் , பாபு, மருத்துவமனை ஊழியர், அரசு மருத்துவர்

காட்சி – 1

பங்கேற்பவர் : பெரியவர் ஆறுமுகம்
ஆறுமுகம்: (தனக்குள்ளே )

பேரப்புள்ளைக்கு இரண்டு நாளா ஒரே கஷ்டமா இருக்குது. குழந்தைக்குக் காய்ச்சலா, இருமலா, சளியா எதுவுமே சரியாக் கண்டு பிடிக்க என்னால் முடியலை.

தனியார் ஆஸ்பத்திரியில் போய்ப்பார்க்க நம்ம கைல காசும் இல்லே. பேசாம அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான். அங்கதான் மருந்தும், சிகிச்சையும் இலவசமாக் கெடைக்கும். அடேயப்பா… அரசு ஆஸ்பதிரியிலே காலைல 7 மணிக்கே எவ்வளவு கூட்டம் இருக்கு?!

புறநோயாளி பிரிவுல சீட்டு பதிஞ்சிட்டேன். இப்போ வரிசைலையும் நின்னுட்டேன். ஆனால் டாக்டரைப் பார்க்க இன்னும் 2 மணி நேரமாவது கட்டாயம் ஆகலாம்.

பேரப்புள்ளை குட்டிக் குழந்தைதான் 5 கிலோ தான் எடை ஆனால் தூக்கி வச்சிருந்த கையெல்லாம் கடுகடுன்னு கடுக்குதே என்ன செய்ய? பேரப்புள்ளையை சந்தோஷமா தூக்கி வச்சா எடையும் தெரியாது….. வலியும் வராது…. ஆனால்…. என்னோட நிலைமை அப்படியா?

கஷ்டப்பட்டு ஒரே மகன்னு செல்லமா வளர்த்தேன். கம்பெனில் வேலைக்கும் ஏற்பாடு பண்ணி கல்யாணமும் செய்து வச்சேன். அவன்.. எனக்குப் பாரமா இந்தப் பேரப்புள்ளையத் தந்துட்டு போயே போயிட்டாளே!

எனக்குக் கொள்ளி போட பொறந்த பையன் என்னையே கொள்ளி போட வச்சுட்டானே!? திடீர்னு நோய் வந்து இறந்துபோன மனைவியை நெனைச்சுகிட்டே தன்னோட வாழ்வை அவனே முடிச்சுகிட்டானே!

தன்னை வளர்த்து ஆளாக்கின அப்பா தான் பெத்த புள்ளை இதப்பத்தியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாம், பொண்டாட்டி மேல் உள்ள பாசத்துல விஷம் குடிச்சு உயிரை விட்டுட்டானே! இந்த மாதிரி என்னோட மனைவி இறந்தப்போ நானும் போயிருந்தா.. இவனோட நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சானா?

இப்போ…. என்னையே கவனிக்க ஆள் வேணும்கற நிலையிலே பேரப்புள்ளைய வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்படறேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு என்னால் வாழத் தெரியலையே!?

மருத்துவமனைப் பணியாளர் : அய்யா… பெரியவரே ! அடுத்து நீங்கதான்…… டாக்டரைப் பார்க்க உள்ளே போங்க அய்யா.

ஆறுமுகம் : வணக்கம் டாக்டர் அய்யா.

டாக்டர் : வணக்கம். அய்யா.

(குழந்தையை பரிசோதிக்கிறார்) அய்யா …. குழந்தையை சோதனை பண்ணிப்பாத்துட்டேன். கபம், சளிதான் …. கவலைப்பட வேண்டாம். 2 நாள் மருந்து மாத்திரை தவறாம் கொடுங்க. சரியாயிடும்.

ஆறுமுகம் : சரிங்க டாக்டர்.

காட்சி – 2

பங்கேற்பவர் : முதியவர் ஆறுமுகம், சமூக சேவக இளைஞர் பாபு
முதியவர்: பாபு ……. பாபு …… சுகந்தானா தம்பி.

பாபு : அய்யா… வணக்கம்…… பேரப்புள்ளை நல்லா இருக்காங்களா? நீங்க எப்படி இருக்கீங்க?

ஆறுமுகம் : நான் உடம்பு அளவுல நல்லாத்தான் இருக்கேன். மனசு அளவுல ரொம்ப நொந்து போயிருக்கேன். குழந்தைக்கு கடுமையான கபம்.. ச… 2 நாளா அவஸ்தை … அரசு மருந்தகத்துல சிகிச்சை கொடுத்தப்புறம்…. இப்போ நல்ல குணமாயிட்டான்.

பாபு : உங்க பேரப்புள்ள சம்பந்தமா நான் ஒரு விஷயம் கேட்டேனே! என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?

ஆறுமுகம் : படிச்சவங்கன்னு சொல்றீங்க… ரொம்ப தெரிஞ்சவங்கன்னு சொல்றீங்க…. புள்ளையப் பத்தி கவலைப்படவே தேவை இல்லைன்னு சொல்றீங்க. இனிமே யோசிக்க என்ன இருக்கு? உங்க பேராசிரிய நண்பரை வரச்சொல்லுங்க.

—— திரை ——
காட்சி – 3

இடம் : முதியவர் ஆறுமுகம் வீடு
பங்கேற்போர் : ஆறுமுகம், பாபு, பாபுவின் நண்பர் பேராசிரியர் கோபிநாத், கோகிலா [பேராசிரியர் கோபிநாத் மற்றும் கோகிலா தம்பதிகளை காரில் அழைத்துக் கொண்டு ஆறுமுகம் வீட்டிற்கு வருகிறார் பாபு]

பாபு : அய்யா ….. பெரியவரே

ஆறுமுகம் : தம்பி பாபு …. எல்லாரும் உள்ளே வாங்க….. வாங்க… வணக்கம். கோபிநாத் : அய்யா …. வணக்கம். பாபு எல்லாம் சொன்னாரு. உங்க குழந்தையை சட்டப்படி சுவீகாரம் எடுத்துக்கிறோம். கடவுள் கருணையால், உங்க உதவியால் எங்களுக்கு புள்ளைப் பாக்கியம் கொடச்சிருக்கு. இதுக்காக வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம். அப்புறம்

ஆறுமுகம் : அப்புறம்…. என்ன தயக்கம்? வேற எதுவும் சொல்லணும் என்றாலும் சொல்லிடுங்க. பேராசிரியர் கோபிநாத் : எங்க குடும்பத்துல பெரியவங்க யாருமே இப்போ வழிகாட்ட இல்லை0

உங்களையும் எங்களோட கூட்டிட்டு போக எங்களுக்கு ஆசை. உங்க பேரனைவிட்டுப் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு வழிகாட்ட நீங்களும் தேவை. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுகரமா இருப்போமே! உங்க சம்மதம் ரொம்ப முக்கியம்.

ஆறுமுகம் : கரும்பு தின்னக் கூலியா? கட்டாயம் நானும் வாரேன்…… ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை’ அப்டீன்னு பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் அதை உணர்கிறேன். பாபு தம்பி மனித உருவத்துல வந்து உதவின தெய்வம் நீ தாம்பா ….

பாபு : அய்யா ….. நான் ஒரு கருவிதான். எல்லாம் அந்த சிவன் செயல். ஆறுமுகம் : தத்தளிச்ச காலத்தில் பயிர்களைக் காப்பாத்த ‘கோடை மழை’ வந்தது போல, எங்களைக் காப்பாத்த கோபிநாந், கோகிலா தம்பிதிகள் வந்திருக்காங்க…. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்…

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1X4 = 4]

Question 47.
(அ) ‘விண்வேறு ‘ என்று துவங்கும் சுரதாவின் பாடல்.
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல் வேறு: பனித்துளியும் மழையும் வேறு:
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. – சுரதா

(ஆ) அஃகாமை’ என்று துவங்கும் திருக்குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் – திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *