Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்
கற்பவை கற்றபின்
Question 1.
திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வகுப்பில் பகிர்க.
Answer:
ஒருநாள் முயலும் ஆமையும் போட்டி ஒன்றை வைத்துக் கொண்டது. தொலைவில் தெரிந்த மலையுச்சியை யார் முதலில் அடைகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் என்பது அப்போட்டியின் விதி. ஆமை மெதுவாகத்தான் செல்லும்; முயல் வேகமாகச் செல்லும். அதனால் முயல் ஆமையின் மீது அலட்சியம் கொண்டது.
முயல் ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டது. ஆனால், ஆமை மெதுவாக நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருந்தது. ஆமையிடம் முயற்சி இருந்ததால், அது மலையுச்சியைப் போய் சேர்ந்தது.
முயல் முயற்சி செய்யாததால் கண்விழித்து பார்த்தது, தான் முயற்சி செய்யாததால் தோற்றுப் போனதை எண்ணி மிகவும் வருந்தியது. இதைத்தான் திருவள்ளுவர்,
‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’ என்கின்றார்.
பாடநூல் வினாக்கள்
Question 1.
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
ஒரு மாணவனின் உள்ளத்தில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பயன் தந்தது என்பதை இக்கதை மூலம் காணலாம்.
காணாமல் போன வேட்டி :
ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர். எளிய குடிசை வீடுதான் அவருடைய வீடு. ஒருநாள் காலை தனது எட்டு முழ வேட்டியைத் தும்பைப் பூவைப் 0 போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வந்து பார்க்கும்போது, அந்த வேட்டியைக் காணவில்லை.
ஊர் மக்கள் கூற்று :
கிணற்றில் பல முறை தண்ணீர் எடுப்பதற்குச் சிகாமணி தான் அந்தப் பக்கம் அடிக்கடி வந்தான். எல்லோரும் வேலைக்குப் போய் இருந்த நேரத்தில், அவன் அந்த வேட்டியை எடுத்து இருப்பான். சிகாமணியின் தந்தை பண்டுக் கிழவர். இவனும் ஒரு திருடன். இவன் மகனும் ஒரு திருடன் என்று ஊரார் கூறினார்கள்.
திருக்குறள் வகுப்பு :
சிகாமணியின் மகன் சகாதேவன். அவனும் அந்த ஆசிரியரின் பள்ளியில்தான் நான்காம் வகுப்பு படிக்கின்றான். வேட்டி விஷயத்தை அந்தப் பையனிடம் அவர காட்டிக்கொள்ளவில்லை
‘அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு’
என்னும் குறளை ஆசிரியர் நடத்தத் தொடங்கினார். சிறந்த குடியில் பிறப்பது யார் கையில் உள்ளது? எனவே, திருவள்ளுவர் அப்படிக் கூறியிருக்க மாட்டார். அப்பன் திருடனாக இருக்கலாம், மகன் நல்லவனாக இருப்பான் என்று விளக்கம் தந்தார்.
சகாதேவன் செயல் :
மதிய உணவிற்காக ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் ஆசிரியரின் வேட்டியைக் கொண்டு வந்தான். இதனைச் சகாதேவன் கொடுத்ததாகவும் தாங்கள் நடத்திய பாடத்தால், அப்பா திருடி வைத்திருந்த உங்களுடைய வேட்டியை அவன் கொடுக்கச் சொன்னான் என்றான். ஊரார் ஒன்று கூடி விட்டனர்.
ஆசிரியரின் எண்ண ம் :
சிகாமணிதான் திருடன் என்பதை, அவன் மகன் சகாதேவன் சொல்லிவிட்டான். ‘அவனுக்குத் தண்டனை வாங்கி கொடுக்கலாம் வாருங்கள்’ என்று ஆசிரியரை ஊரார் அழைத்தனர். சிகாமணிக்குத் தண்டனை கிடைத்தால், சகாதேவனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று ஆசிரியர் எண்ணினார். ஊரார் எவ்வளவு கூறியும் ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. என் வீட்டில் திருடு போகவில்லை என்று நான் சாட்சியம் சொல்வேன் என்றார். மக்களுக்கு எல்லாம் புரிந்தது.
முடிவுரை :
“வள்ளுவரின் குறட்பாக்கள் ஒருவரின் மனதை மாற்றம் செய்யும் என்பதில் ஐயமில்லை ” என்பதை இக்கதை வாயிலாக நாம் அறிய முடிகின்றது. உலகப் பொதுமறை கற்று, அதன் வழி நடப்போம்.