Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.3 பல்துறைக் கல்வி Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி
கற்பவை கற்றபின்
Question 1.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
Answer:
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ………………………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
Answer:
ஆ) கல்வி
Question 2.
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ……………………
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
Answer:
அ) இளமை
Question 3.
இன்றைய கல்வி ……………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
Answer:
ஈ) தொழிலில்
நிரப்புக
1. கலப்பில் …………………………. உண்டென்பது இயற்கை நுட்பம்
2. புற உலக ஆராய்ச்சிக்கு ………………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது ………………………. இன்பம் ஆகும்.
Answer:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய
பொருத்துக
1. இயற்கை ஓவியம் – அ) சிந்தாமணி
2. இயற்கை தவம் – ஆ) பெரிய புராணம்
3. இயற்கைப் பரிணாமம் – இ) பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – ஈ) கம்பராமாயணம்
Answer:
1. இ
2. அ
3. ஈ
4. ஆ
குறுவினா
Question 1.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?
Answer:
- இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
- நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்.
Question 2.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
Answer:
தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.
Question 3.
திரு. வி. க., சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
- இளங்கோவடிகள்
- சேக்கிழார்
- திருத்தக்கத்தேவர்
- கம்பர்
- திருஞானசம்பந்தர்
- பரஞ்சோதி
- ஆண்டாள்
சிறு வினா
Question 1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.
Answer:
- கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.
- தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
- ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம் பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் தமிழ்
- கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.
Question 2.
அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:
- உலக வாழ்விற்கு மிக இன்றியமையாதது அறிவியல்.
- உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றைப் பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்.
- இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
- நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.
- இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
- ஆகவே, அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு. வி. க. கூறுகின்றார்.
நெடுவினா
Question 1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.
(ii) நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.
(iii) இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.
(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.
சிந்தனை வினா
Question 1.
திரு. வி. க குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
Answer:
(i) திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்க விரும்புகிறேன்.
(ii) காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
இளமையில் கல் என்பது ………………….
அ) முதுமொழி
இ) அறிவு மொழி
ஆ) புதுமொழி
ஈ) தமிழ்மொழி
Answer:
அ) முதுமொழி
Question 2.
இயற்கை ஓவியம் …………………..
அ) பத்துப்பாட்டு
இ) திருக்குறள்
ஆ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) பத்துப்பாட்டு
Question 3.
இயற்கை இன்பக்கலம் ……………………….
அ) பத்துப்பாட்டு
இ) திருக்குறள்
ஆ) கலித்தொகை
ஈ) மணிமேகலை
Answer:
ஆ) கலித்தொகை
Question 4.
இயற்கை வாழ்வில்லம் ……………………
அ) பெரிய புராணம்
இ) திருக்குறள்
ஆ) சிந்தாமணி
ஈ) மணிமேகலை
Answer:
இ) திருக்குறள்
Question 5.
இயற்கைத் தவம் ……………….
அ) சீவகசிந்தாமணி
ஆ) பெரிய புராணம்
இ) கம்பராமாயணம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) சீவகசிந்தாமணி
Question 6.
இயற்கைப் பரிணாமம் …………….
அ) கம்பராமாயணம்
இ) திருவாசகம்
ஆ) பெரிய புராணம்
ஈ) திருக்குறள்
Answer:
அ) கம்பராமாயணம்
Question 7.
இயற்கை அன்பு ……………………
அ) கம்பராமாயணம்
இ) சீவகசிந்தாமணி
ஆ) பெரிய புராணம்
ஈ) பத்துப்பாட்டு
Answer:
ஈ) பெரிய புராணம்
நிரப்புக
1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………………….
2. ………………………. கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே.
3. கல்வி என்பது ……………….. தேடும் வழிமுறை அன்று.
4. …………….. வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
5. கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது ………………….. நுட்பம்.
6. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் …………………….. மற்றும் ………………..
7. இயற்கை இறையுறையுள் ………….., …………………., …………………
8. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது …………………… என்னும் அறிவுக்கலை.
Answer:
1. கல்வி
2. தொழில்
3. வருவாய்
4. தாய்மொழி
5. இயற்கை
6. சிலப்பதிகாரம், மணிமேகலை
7. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி
8. அறிவியல்
குறுவினா
Question 1.
திரு. வி. க வின் படைப்புகள் யாவை?
Answer:
- மனித வாழ்க்கையும்
- தமிழ்த்தென்றல்.
- காந்தியடிகளும்.
- பொதுமை வேட்டல்.
- பெண்ணின் பெருமை.
- முருகன் அல்லது அழகு.
Question 2.
இயற்கை அன்னையின் எச்சரிக்கை என்று திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:
தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டாம் என்றும், அறிவுலகின் பொருட்டுக் கல்விபயிலுதல் வேண்டும் என்றும், இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமாய்
இருக்கிறாள் என்று திரு. வி. க. கூறுகிறார்.
Question 3.
இயற்கை முறையாகத் திரு. வி. க எடுத்துரைப்பது யாது?
Answer:
- நாம் தமிழ் மக்கள்! நாம் நமது தாய்மொழி வாயிலாக கல்வி பெறுதலே சிறப்பு.
- அதுவே, இயற்கை முறை என்று திரு. வி. க. கூறுகிறார்.
Question 4.
கல்வி குறித்து விஜயலட்சுமி பண்டிட் கூறும் கருத்துகள் யாவை?
Answer:
“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கல்வி குறித்து விஜயலட்சுமி பண்டிட் கூறுகிறார்.
Question 5.
எது தமிழுக்கு இழுக்காகாது என்று திரு. வி. க. கூறுகிறார்?
Answer:
குறியீடுகளுக்குப் பல மொழிகளில் இருந்து கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது என்று திரு. வி. க. கூறுகிறார்.
Question 6.
இளைஞர்களுக்குத் திரு. வி. க. விடுக்கும் வேண்டுகோள் யாது?
Answer:
(i) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்று இருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ?
(ii) தமிழ்க் காவியங்களைப் படியுங்கள், இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
சிறுவினா
Question 1.
ஏட்டுக்கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் கருத்துகள் யாவை?
Answer:
- ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது.
- ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது.
- இந்நாளில் கல்வி என்பது பொருள் அற்றுக் கிடைக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
- நாளடைவில், அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்கிறார் திரு. வி. க.
Question 2.
திரு. வி. க. குறிப்பிடும் கல்வி குறித்த தலைப்புகளைப் பட்டியலிடுக.
Answer:
- ஏட்டுக் கல்வி
- இயற்கைக் கல்வி
- தொழிற் கல்வி
- இசைக் கல்வி
- தாய்மொழிவழிக் கல்வி
- நாடகக் கல்வி
- தமிழ்வழிக் கல்வி
- அறிவியல் கல்வி
- காப்பியக் கல்வி
Question 3.
தாய்மொழிவழிக் கல்வி குறித்து திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:
- நாம் தமிழர், நம் தாய்மொழி வாயிலாகவே கல்வி பெறுவது சிறப்பு. அதுவே தான் இயற்கை முறை.
- போதிய ஓய்வு நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம்.
- ஆனால் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
- தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டு பிறப்பது ஆகும்
– என்று தாய்மொழிவழிக் கல்வி குறித்து திரு. வி. க. கூறுகின்றார்.