Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 6.5 புணர்ச்சி Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி
கற்பவை கற்றபின்
Question 1.
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
Answer:
இ) மூன்று
Question 2.
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
Answer:
அ) இயல்பு
பொருத்துக
1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்
Answer:
1. ஈ
2. இ
3. ஆ
4. அ
சிறுவினா
Question 1.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
சான்று: தாய் மொழி
தாய்+மொழி = தாய்மொழி இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை . எனவே இது இயல்பு புணர்ச்சி.
Question 2.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
மரம் + கட்டில் – திரிதல் விகாரப்புணர்ச்சியின் படி ‘ம்’ என்பது ‘க்’ ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்தது. இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு. கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ என்ற மெய்யெழுத்து தோன்றியது.
மொழியை ஆள்வோம்
கேட்க.
நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக..
1. உழவும் நெசவும்
என் உயிர் கொடுத்து இன்னுயிர் பேசவைத்த இறைவனுக்கும் என் தமிழ் தாய்க்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவும் நெசவும் எனும் நல்லதொரு தலைப்பில் சில மணித்துளிகள் உங்களுடன் பேசுகின்றேன்.
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே ‘ என்கிறது புறநானூறு. அதாவது ஒரு மனிதனுக்கு உணவும் உடையும் அவசியம் தேவை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறது. அந்தப் புறநானூற்று வரிகள் உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் இல்லை என்றால் என்ன ஆகும்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உணவு இல்லாமல் வறுமையில் வாடி மண்ணின் வாய்க்கு உணவாக நாம் போய் இருப்போம். ஆடை இல்லாமல் போனால் மானம் அழிந்து மண்ணுக்கு இறையாய் இருப்போம். எனவே உழவும் நெசவும் இரு கண்களாக நாம் நினைக்க வேண்டும்.
உணவுத்தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவத்தினை நாம் கொடுக்க வேண்டும்.
எதிர்கால பாரதத்தை உருவாக்கக்கூடிய இளைஞர்களாகிய நாம் உழவுத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் கற்று அவை மேன்மையடைய நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி! வணக்கம்.
2. தொழில்கள் பலவிதம்
ஆண்டவனுக்கும், அன்னைத் தமிழுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு தொழில்கள் பலவிதம் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன்.
உழவுத் தொழில், நெசவுத் தொழில், சிறு தொழில், குறுந்தொழில், பெருந்தொழில் என தொழில்கள் பல உள்ளன. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்’ என்றான் பாரதி. தொழில்களிலேயே முதன்மையான தொழில் உழவுத் தொழில் மற்றும் நெசவுத் தொழிலாகும். பிற தொழில்கள் அனைத்தும் இந்த இரு தொழில்கள் இடமிருந்து தான் தோன்றின.
சிறு முதலீடுகள் கொண்டு செய்யப்படும் தொழில்கள் சிறுதொழில் எனப்பட்டன. குறு முதலீடுகளைக் கொண்டு செய்யப்பட்ட தொழில்கள் குறுந்தொழில் எனப்பட்டன. ஏழை எளிய மக்கள் குடிசைத் தொழிலை மேற்கொண்டனர். ஏதாவது ஒரு தொழில் கற்றுப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தின் நிபந்தனை. எனவே தொழில் வகைகளை அறிந்து ஏதேனும் ஒரு தொழிலைக் கற்று நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றுச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி! வணக்கம்.
சொல்லக் கேட்டு எழுதுக.
பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகிறது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல் மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.
பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
1. ஆயிரங்காலத்துப் பயிர் – அ) இயலாத செயல்
2. கல்லில் நார் உரித்தல் – ஆ) ஆராய்ந்து பாராமல்
3. கம்பி நீட்டுதல் – இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது
4. கானல்நீர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது
5. கண்ணை மூடிக்கொண்டு – உ) விரைந்து வெளியேறுதல்
Answer:
1. ஈ
2. அ
3. உ
4. இ
5. ஆ
பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Question 1.
வாழையடி வாழையாக
Answer:
முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.
Question 2.
முதலைக்கண்ணீர்
Answer:
காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தான்.
Question 3.
எடுப்பார் கைப்பிள்ளை
Answer:
ரகு சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படுகிறான்.
கட்டுரை எழுதுக.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
முன்னுரை :
பெற்ற பிள்ளை உன்னைக் கைவிட்டாலும், கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும், நீ பழகிய கைத்தொழில் உன்னைக் கைவிடாமல் காப்பாற்றும் என்பது ஆன்றோர் வாக்கு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது.
கைத்தொழிலின் அவசியம் :
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். புள்ளிக் கணக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பார்கள். அது உண்மையே நாம் கற்கும் கல்வியும் நம் எதிர்காலத்திற்கு ஒரு தொழில் கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை. படித்து முடித்து பட்டம் பெற்று பின்னர் வேலை தேடும் போது தான் தெரியும். ஏதாவது ஒரு கைத்தொழிலாவது கற்று இருக்கலாமே என்று யோசிப்போம்.
கைத்தொழில் வகைகள் :
பாய் பின்னுதல், கூடை பின்னுதல், அலங்கார பொம்மைகள் செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், கைபேசி பழுது பார்த்தல் என பலவகைத் தொழில்கள் கைத்தொழிலில் உள்ளன.
கைத்தொழிலின் பயன்கள் :
கைத்தொழில் கற்றால் படித்து வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. கைத்தொழில் கற்ற உடன் வேலை தரும். வீட்டில் உள்ள பொருட்களை நாமே சரி செய்யலாம். கைத்தொழில்களை நாம் கற்றும் அதன் மூலம் பிறருக்கு அதனைக் கற்றுக் கொடுத்தும் பொருள் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
கைத்தொழிலால் தோன்றிய கல்வி :
தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறுதொழில் கல்வி ஆகியவை எல்லாம் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதொழில் பயிற்சி குறுந்தொழில் பயிற்சிக்காகக் கைத்தொழில்கள் பலவற்றை இன்று தொழிற்கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.
முடிவுரை :
வறுமையினால் பசி என்று வரக்கூடிய ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, ஒரு தூண்டிலை வாங்கிக் கொடுக்கலாம். அதுதான் அவருடைய வறுமையை நீண்டகாலம் போக்கும். இதுதான் கைத்தொழிலின் சிறப்பாகும்.
கைத்தொழில் கற்போம்!
கவலை இல்லாமல் வாழ்வோம்!!
மொழியோடு விளையாடு
ஊர்களையும் அவற்றின் சிறப்பு பெயர்களையும் அறிவோம்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள் :
கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தெளிவேன்.
நெசவுத் தொழிலின் சிறப்பை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. நூல் – Thread
2. தறி – Loom
3. பால்பண்ணை – Dairy farm
4. தோல் பதனிடுதல் – Tanning
5. தையல் – Stitch
6. ஆலை – Factory
7. சாயம் ஏற்றுதல் – Dying
8. ஆயத்த ஆடை – Ready made
இணையத்தில் காண்க
குடிசைத் தொழில்களின் பட்டியல் இணையத்தில் தேடி எழுதுக.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தமிழ் அமுதம் என்பதில் தமிழ் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
அ) நிலை
Question 2.
தமிழ் அமுதம் என்பதில் அமுதம் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
ஆ) வரு
Question 3.
சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
அ) உயிரீற்று
Question 4.
மண்ணழகு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஆ) மெய்யீற்று
Question 5.
பொன்னுண்டு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
இ) உயிர்முதல்
Question 6.
பொற்சிலை என்பது …………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஈ) மெய்முதல்
Question 7.
தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
இ) தோன்றல் விகாரம்
Question 8.
விற்கொடி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஆ) திரிதல் விகாரம்
Question 9.
மன மகிழ்ச்சி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஈ) கெடுதல் விகாரம்
குறுவினா
Question 1.
புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி ஆகும்.
Question 2.
விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியும், வருமொழியும் இணையும் போது நிலை மொழியிலோ அல்லது வருமொழியிலோ அல்லது இரண்டுமோ மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
Question 3.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை: தோன்றல், திரிதல், கெடுதல் ஆகியனவாகும்.
Question 4.
உயிர்ரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
சான்று: சிலை + அழகு = சிலையழகு
Question 5.
மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
சான்று: மண் + அழகு = மண்ணழகு
Question 6.
உயிர் முதல் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
Answer:
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும்.
சான்று: பொன் + உண்டு + பொன்னுண்டு
Question 7.
மெய் முதல் புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய் முதல் புணர்ச்சி எனப்படும்.
சான்று: பொன் + சிலை = பொற்சிலை