Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Students can Download Tamil Chapter 2.2 அறம் என்னும் கதிர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் எப்போதும் ……………………..ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
Answer:
ஈ) வாய்மையை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
Answer:
இ) இனிமை + சொல்

Question 3.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
Answer:
இ) அறக்கதிர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 4.
‘இளமை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ……..
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
Answer:
அ) முதுமை

பொருத்துக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 3
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 1

குறுவினா

Question 1.
அறக்கதிர் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
Answer:
அறக்கதிர் விளைய எருவாக இடவேண்டியது உண்மை பேசுதல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
Answer:
கடுஞ்சொற்களை நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது.

சிறுவினா

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
Answer:
இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்கள் :

  • இனிய சொல்லையே விளைநிலமாக கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.
  • வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும்.
  • அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாக பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.

சிந்தனை வினா

இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

கற்பவை கற்றபின்

Question 1.
பிறருடன் பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.
Answer:
பிறருடன் பேசும்போது நாங்கள் பயன்படுத்தும் இன்சொற்கள் :
இன்சொல் என்பது உதட்டளவில் தோன்றி வருவதல்ல. உள்ளத்திலிருந்து அன்புடன் தோன்றும். அச்சொல் மகிழ்ச்சியளிக்கும். இன்சொல் பேசுவது ஈகையைவிடச் சாலச் சிறந்தது. அறம் வளர்ந்த உள்ளத்திலே இனிய சொற்கள் பிறக்கும்.

நம்மைவிட வயதில் மூத்தவர்களிடம் பேசும்போது மிக்க மரியாதையுடன் பேசுவேன். இது ஒரு கடமை மட்டுமல்ல, அது ஒரு நல்லொழுக்கம் ஆகும். எவரையும் நீ, வா, போ என்று ஒருமையில் அழைப்பதைத் தவிர்ப்பேன். நீங்கள், வாருங்கள் என்று மரியாதைப் பன்மையுடன் தான் பேசுவேன். பிறரை மதிப்பதால் நான் எப்பொழுதும் தாழ்ந்து போக மாட்டேன் என்பதை நான் உணர்வேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

யாரையும் இகழ்ந்து பேசமாட்டேன். பேச்சில் வன்முறையைப் பயன்படுத்தமாட்டேன். எவரைப் பற்றியும் புறங்கூறமாட்டேன். பிறரை ஏளனப்படுத்திப் பேச மாட்டேன். அகந்தையுடன் பேசமாட்டேன். பிறருடைய மனம் புண்படாத வகையில் பேசுவேன்.
இவைபோன்ற சொற்களை நாங்கள் பயன்படுத்துவோம்.

Question 2.
உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
Answer:
என் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நான் மகிழ்ந்த நிகழ்வு :
என் அன்னை எப்போதும் இன்சொற்களையேத் தான் பயன்படுத்துவார். இதுவரை என் அம்மா யாரிடமும் கோபப்பட்டு பேசியதில்லை. ஒருமுறை என் வீட்டிற்கு என் உறவினருடைய குழந்தை வந்தது. அக்குழந்தையுடன் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அக்குழந்தை என் புத்தகத்தைக் கிழித்துவிட்டது. அதனால் கோபம் வந்து அக்குழந்தையை அடித்துவிட்டேன். குழந்தை அழுதது. என் அம்மா பதற்றத்துடன் “என்னவாயிற்று” என்று கேட்டபடியே வேகமாக ஓடி வந்தார். நடந்ததைக் கேட்டறிந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

என்னை அடிப்பார்கள், திட்டுவார்கள் என்று பயந்தேன். ஆனால் முதலில் குழந்தையைச் சமாதானப்படுத்தினார்கள்.

பிறகு என்னிடம் வந்து “நீ யாரிடமும் கோபப்படக்கூடாது. குழந்தைக்குப் படிக்கும் புத்தகம் என்பது தெரியுமா? குழந்தை இருக்கும் போது நீதான் உன் புத்தகத்தைக் குழந்தையின் கைக்கெட்டாமல் வைத்திருக்க வேண்டும். நம்மைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கக்கூடாது. நாம் கூறுவதைப் புரிந்து கொள்ளும் 5 வயதாக இருந்தால் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இல்லையெனில் தவறு நிகழாமல் இருக்க வழி செய்ய வேண்டும். எந்தப் பொருளை எங்கு வைக்க வேண்டும் என்று அறிந்து அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும். எல்லோரிடமும் அன்போடு பழகு. நம்மைவிடச் சிறியவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்திடு, மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்” என்று இன்சொற்களாலேயே அறிவுரை கூறினார். அவ்வுறிவுரையை நான் என்றும் மறவேன்.

அன்றிருந்து நான் அனைவரிடமும் அன்போடு பழகுகிறேன். அந்நாளை என்னால் மறக்கவியலாது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.

1. முனைப்பாடியார் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
2. முனைப்பாடியார் வாழ்ந்த காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
3. அறநெறிச்சாரம் அறநெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது.

விடையளி :

Question 1.
முனைப்பாடியார் குறிப்பு எழுதுக
Answer:

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
  • இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
  • இவர் 225 பாடல்களைக் கொண்ட அறநெறிச்சாரம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
முனைப்பாடியார் விளைநிலம் என்றும் வித்து என்றும் எவற்றைக் கூறுகிறார்?
Answer:
இனிய சொல்லை விளைநிலமாகவும், ஈகை என்னும் பண்பை விதையாகவும் முனைப்பாடியார் கூறுகிறார்.

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *