Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Students can Download Tamil Chapter 3.1 ஒரு வேண்டுகோள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மயிலும் மானும் வனத்திற்கு ………………………… தருகின்ற ன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
Answer:
ஆ) வனப்பு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 2.
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
Answer:
அ) நெடி

Question 3.
அன்னை தான் பெற்ற ………….. ….. சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
Answer:
இ) மழலையின்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 4.
வனப்பில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer:
ஆ) வனப்பு + இல்லை

Question 5.
வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்ப்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

நயம் அறிக

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள் - 1

குறுவினா

Question 1.
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?
Answer:
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டும்.

Question 2.
ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
Answer:
மானுடப் பண்பு நிறைந்திருந்தால் ஒரு கலை உயிர்ப்புடையதாக அமையும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

சிறுவினா

சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
(i) சிற்பங்கள் : ஒரு சிற்பி, பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால் அதிக வியர்வை நாற்றம் வீச வேண்டும். உழவனின் உருவச் சிலையாக இருந்தால் ஈரமண் வாசம் வீச வேண்டும்.

(ii) ஓவியங்கள் : ஓர் ஓவியன், தாயின் உருவத்தைத் தீட்டினால் அன்பும் பண்பும் மேலோங்கிட வேண்டும். சிறு குழந்தையின் சித்திரமானால் உடலெங்கும் பால் மணம் கமழ வேண்டும். சிற்பங்களும் ஓவியங்களும் இவ்வாறு அமைவதே சிறப்பு என்று கவிஞர் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

சிந்தனை வினா

நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
Answer:
நான் ஒரு கலைஞராக இருந்தால் பச்சைப்பசேல் என விளங்கும் மலைகள், அங்கு விழும் அருவிகள், பயமறியாமல் பறக்கும் பறவைகள், புலி, மான், சிங்கம் என அனைத்து வனவாழ் விலங்குகளும் அச்சமின்றி அருவியில் நீர் அருந்துதல், ஒன்றையொன்று நட்புடன் நோக்குதல் இவற்றை உருவாக்குவேன்.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Answer:
மயிலாட்டம்: மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர், தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீ ர் குடித்துக் கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக் காட்டுவர்.

Question 2.
உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
உழைப்பு இல்லையேல்
உணவும், மகிழ்ச்சியும்
இல்லை இன்று
உழைத்தால் வயதான போது
உட்கார்ந்து உண்ணலாம்
உழைக்க வேண்டிய காலத்தில்
உழைக்கவில்லை என்றால்
ஓய்வு எடுக்க வேண்டிய
காலத்தில் உழைக்க வேண்டும்
உயிரினங்கள் கூட உழைக்கின்றன
கையிருந்தும் உழைக்காமல்
இருந்தால் வாழ்க்கை இல்லாமலாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. மழலை – குழந்தை
4. வனப்பு – அழகு
5. பூரிப்பு – மகிழ்ச்சி
6. மேனி – உடல்

நிரப்புக.

Question 1.
பூரிப்பு என்பதன் பொருள்
Answer:
மகிழ்ச்சி

Question 2.
தேனரசன் …………….. பணியாற்றியவர்.
Answer:
தமிழாசிரியராகப்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 3.
ஒரு வேண்டுகோள் கவிதை ……………. என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
Answer:
பெய்து பழகிய மேகம்

விடையளி :

Question 1.
தேனரசன் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  • மண்வாசல்
  • வெள்ளை ரோஜா
  • பெய்து பழகிய மேகம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 2.
தேனரசன் எந்த இதழ்களில் கவிதைகள் எழுதினார்?
Answer:

  • வானம்பாடி
  • குயில்
  • தென்றல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *