Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Students can Download Tamil Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி …………………………..
அ) மலையாளம்
ஆ) கன்ன டம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
Answer:
இ) சமஸ்கிருதம்

பொருத்துக

1. இயற்சொல் – பெற்றம்
2. திரிசொல் – இரத்தம்
3. திசைச்சொல் – அழுவம்
4. வடசொல் – சோறு
Answer:
1. இயற்சொல் – சோறு
2. திரிசொல் – அழுவம்
3. திசைச்சொல் – பெற்றம்
4. வடசொல் – இரத்தம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

குறுவினா

Question 1.
மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
Answer:

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
  • இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • மண், பொன் – பெயர் இயற்சொல்

Question 2.
இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
Answer:
இயற்சொல்லின் நான்கு வகைகள்.
இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகியன நான்கு வகைகளாகும்.

எடுத்துக்காட்டு :
மண், பொன் – பெயர் இயற்சொல்
நடந்தான், வந்தான் – வினை இயற்சொல் அவனை,
அவனால் – இடை இயற்சொல்
மாநகர் – உரி இயற்சொல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
Answer:
கமலம், குங்குமம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

சிறுவினா

Question 1.
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

  1. இயற்சொல்,
  2. திரிசொல்,
  3. திசைச்சொல்,
  4. வடசொல்

(i) இயற்சொல் : எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : கடல், கப்பல்

(ii) திரிசொல் : கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : வங்கூழ், அழுவம்.

(iii) திசைச்சொல் : வடமொழி தவிர, பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: சாவி, சன்னல்.

(iv) வடசொல் : வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: வருடம், மாதம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 2.
திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
Answer:
திரிசொல்லின் வகைகள் :
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும். பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
எடுத்துக்காட்டு :
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு திரிசொல் :
எடுத்துக்காட்டு :
இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

Question 3.
பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
Answer:

  • பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்களாகும்.
  • வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
  • முற்காலத்தில் பாண்டி நாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி (கிணறு, பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

கற்பவை கற்றபின்

Question 1.
நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு அதில் உள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.
Answer:
(i) வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும் போது, பரிசளிப்புகள் நடத்தும் போதும் புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு – பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சில புத்தகசாலையை அமைத்து விடலாம்.
விசேஷம் – சிறப்பு
விசேஷம் – வடமொழி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

(ii) சன்னல் வழியாக இராமு போவதை கோபு பார்த்துக் கொண்டிருந்தான்.
சன்னல் – சாளரம்
சன்னல் – திசைச் சொல்

(iii) நாவாய் கரையோரம் ஒதுங்கியது
நாவாய் – திரிசொல்
நாவாய் – கப்பல்

(iv) கபிலன் கதை எழுதினான்
எழுதினான் – வினை இயற்சொல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

Question 1.
ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ………………. எனப்ப டும்.
Answer:
சொல்

Question 2.
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் ……….
Answer:
பதம், மொழி, கிளவி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
இலக்கண முறைப்படி …………….. எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.
Answer:
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

Question 4.
இலக்கிய வகைச் சொற்களை …………….. என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
Answer:
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

Question 5.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் …………… எனப்படும்.
Answer:
இயற்சொற்கள்

Question 6.
இயற்சொல் ……………………… ஆகிய நான்கு வகையிலும் வரும்.
Answer:
பெயர், வினை, இடை, உரி

Question 7.
கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் சொற்கள் …………… எனப்படும்.
Answer:
திரிசொற்கள்

Question 8.
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதை ………….. என்பர்.
Answer:
தற்பவம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 9.
வடசொற்களை ………………… என இருவகையாகப் பிரிப்பர்.
Answer:
தற்சமம், தற்பவம்

Question 10.
திரிசொல் …………………………………………………. ஆகிய நான்கு வகையிலும் வரும்.
Answer:
பெயர், வினை, இடை, உரி

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கடற்பயணம் தொடர்பான கதைகளைப் பெற்றோரிடம் கேட்டு மகிழ்க.
Answer:
சாகச கடல் பயணம்
மாலை வேளை வானம் மேகம் சூழ்ந்தது. நள்ளிரவைப் போல் வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் இன்னும் சூரியன் மறையவில்லை. புயல் மழை கொட்டுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு பனை மர அளவிற்கு ஏறி இறங்கின. அதில் பனை மலர்’ என்ற கப்பல் ராட்டினம் போல மேலே ஏறி கீழே இறங்கியது.

பனை மலர் கப்பல் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து கிளம்பி ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. இங்கிருந்து கப்பல் நிறைய ஏலம், கிராம்பு, மிளகு, பட்டை, சோம்பு, ஜாதி, பத்திரி போன்ற உணவுக்கு நல்ல வாசனை தரும் ஏராளமான பொருட்கள், தூத்துக்குடி முத்துக்கள், பவளங்கள், மாணிக்கக் கற்கள், பட்டுச் சேலைகள், பருத்தி துணிகள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்களை ஏராளமாக ஏற்றிச் சென்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

கப்பலில் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீர், உப்பு, அரிசி, மிளகாய், எண்ணெய் போன்றவற்றை சேமித்துக் கொண்டு போயிருந்தனர். இப்போது, இலங்கையைத் தாண்டி 300 ஆவது கடல் மைல் தொலைவில் பெரும் புயல் ஒன்றை எதிர்கொண்டுள்ளனர். முதலில் சாதாரணமாக நினைத்தாலும், காற்று சுழற்றும், சுழற்றலில், கப்பல் உடைந்து தூள்தூளாகப் போகிறது எனப் பயந்தார்கள். ஆனால் கப்பல் மேலும் கீழும் குதித்தது. கிறுகிறுவென சுற்றிச் சுழன்றது.

கடல் நீர் அருவி கொட்டுவதைப் போல கப்பலுக்குள் புகுந்தது. சில நிமிடங்களில் புயல் நின்று விட்டது. ஊழியர்கள் நூறு பேரும் கப்பலில் புகுந்த தண்ணீரை வாரி வாரி இறைத்து கடலில் ஊற்றினர்.

இரவில் வானத்திலிருந்து சில சமயங்களில் சின்னச் சின்ன எரிகற்கள் விழும். கடலுக்கு மேலே வரும் திமிலங்கள் மிகப்பெரியவை. அவை மேலே வரும் போது அவற்றின் உடல் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் கடலில் இருப்பதைப் போல தெரியும். அதைப் பார்த்ததும் கப்பல் ஊழியர்கள் அதை நிலம் என நினைத்துக்கொண்டு கடலில் பாய பரபரப்பார்கள். ஆனால் மாலுமி அவர்களை அதட்டி நிறுத்துவார்.

கடலுக்குள் மின்னலைப் போல தெரியும் அபூர்வ உயிரினங்கள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் படர்ந்திருக்கும் கடற்கொடிகள், வலையை வீசினால் இரண்டு கப்பல்கள் நிறையும் அளவுக்கு வரும் மீன் கூட்டங்கள் என்றெல்லாம் பார்த்தாலும் அவர்களுக்கு சலிப்பாய் இருந்தது. எப்போது நிலத்தைப் பார்ப்போம் என ஏங்கிப் போனார்கள்.

இப்படியாக பயணம் செய்து ஒரு வழியாக அவர்கள் ஏதென்ஸ் நகரத்தின் 9 துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். கொண்டு வந்த பொருட்கள் எல்லாவற்றையும் கிடங்கில் இறக்கி வைத்தார்கள். அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களை .8 மொய்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு பொருளையையும் பார்த்து வாயைத் திறந்து 3 ஆச்சரியத்தில் மூழ்கினர் அங்குள்ளோர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

முறைப்படி மன்னரைச் சந்தித்த பின்தான் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்பதில் மாலுமி உறுதியாக இருந்தார். ஏதென்சின் ராணி பாட்ரியா அவர்களை வரவேற்றார் மாலுமி: அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் பாதியை ராணி பாட்ரியா வாங்கிக் கொண்டார். அரண்மனையை ஏராளமான தமிழக கலைப் பொருட்களைக் கொண்டு தமிழ்நாட்டின் அரண்மனையைப் போன்று மாலுமி அலங்கரித்தார்.

ராணி மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆப்பிரிக்க வைரங்கள் பதித்த பெரிய வைர் மாலையை மாலுமிக்கு பரிசளித்தார். மீண்டும் விரைவிலேயே அதிக பொருட்களோடு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு மாலுமி மற்றும் கப்பல் ஊழியர்கள் துறைமுகத்திலேயே ஒரு மாதம் 3 தங்கியிருந்து மீதமிருந்த பொருட்களை விற்றனர். கப்பல் ஊழியர்கள் கலைநயத்துடன் 3 இருந்த ஏதென்ஸ் வீதிகளில் மகிழ்ச்சியுடன் தினமும் சுற்றி வந்தனர். கடற்கரையில் இ விளையாடி மகிழ்ந்தனர். ஒரு மாதம் கழித்து இந்தியாவுக்கு திரும்ப மாலுமி முடிவு செய்தார்.

ராணி மினு… மினு…. என சில முறை குரல் கொடுத்தார். மினு நான் வளர்க்கும் டால்பின் உங்களுடன் உங்கள் நாடு வரை துணைக்கு வரும் என்றார். டால்பின் இவர்களின் கடற்பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது.

பின்வரும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

கப்பல்களின் வகைகளும் பயன்களும்.
Answer:
வணக்கம்!
நீர்வழிப்பயணத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. உள்நாட்டு நீர்வழிப் பயணம், 2. கடல்வழிப் பயணம்

கப்பல் பயணம் : காற்றின் துணை கொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறமையைச் சங்கப்பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கப்பல்கள் மூலம் பொருள்கள் பூம்புகார் துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன என்பதற்கு ஆதாரமாக பட்டினப்பாலை என்னும் நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கப்பல் வகைகள் : ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்’ என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது. ‘அருங்கலம் தரீஇயர் நீர்மிசைநிவக்கும் பெருங்கலி வங்கம் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறிய நீர் நிலைகளைக் கடக்க தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் ஆகியவற்றை தமிழர்கள் பயன்படுத்தினர். கலம், வங்கம். நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல்பயணம் மேற்கொண்டனர். கப்பலின் பயன்கள் : முற்காலத்தில் மக்கள் பயணம் செய்வதற்கும் மட்டும் அன்றிப் போர் புரியவும் கப்பல் பெரிதும் பயன்பட்டது. இக்காலத்தில் பெரும்பாலும் பொருள்களை ஏற்றிச் செல்லவே கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைச் சரக்குக் கப்பல்கள் என்பர். போருக்குப் பயன்படும் பெரிய கப்பல்களும் இன்று உள்ளன.

சொல்லக் கேட்டு எழுதுக

  1. பெருந்திரளான மக்களையும் பொருள்களையும் கப்பல்கள் ஏற்றிச் செல்லும்.
  2. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்
  3. வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்துத் திசையை அறிவர்.
  4. ஆழ்கடல் விந்தைகளைப் பற்றி ஆய்வுகள் செய்தார்.
  5. நார்வே நாட்டின் கடற்கரையில் கண்விழித்தோம்.

அறிந்து பயன்படுத்துவோம்

காலம் மூன்று வகைப்படும்.
அவை: 1. இறந்தகாலம், 2. நிகழ்காலம், 3. எதிர்காலம்.
இறந்தகாலம் : நடந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம்.
எடுத்துக்காட்டு: பார்த்தான். ஆடினாள், பறந்தது.

  • கபிலன் திரைப்படத்தைப் பார்த்தான்.
  • கோதை நடனம் ஆடினாள்
  • கிளி பறந்தது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

நிகழ்காலம் : நடக்கும் செயலைக் குறிப்பது நிகழ்காலம்.
எடுத்துக்காட்டு : பார்க்கிறான், ஆடுகின்றாள், பறக்கின்றது.

  • கலிவரதன் நாடகத்தைப் பார்க்கிறான்.
  • பூங்குழலி நாட்டியம் ஆடுகின்றாள்.
  • பறவை வானில் பறக்கின்றது.

எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
எடுத்துக்காட்டு : காண்பான், ஆடுவாள், பறக்கும்.

  • திருவண்ணாமலை தீபத்தை மணிமாறன் கண்களால் காண்பான்.
  • வண்டார்குழிலி ஆட்டம் ஆடுவாள்.
  • வண்டு பறக்கும்.

கட்டங்களை நிரப்புக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 6
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 1

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக

Question 1.
அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
Answer:
அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்

Question 2.
கண்மணி நாளை பாடம் படித்தாள்.
Answer:
கண்மணி நாளை பாடம் படிப்பாள்

Question 3.
மாடுகள் இப்பொழுது புல் மேயும்
Answer:
மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 4.
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
Answer:
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

Question 5.
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
Answer:
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

பயணங்கள் பலவகை

முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்
பயணம் – வான்வழிப்
பயணம் – முடிவுரை

முன்னுரை:
பயணம் செய்வதில் இளஞ்சிறார்கள் முதல் முதியவர்கள் வரை பெருவிருப்பம் கொள்வார்கள். பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றைப் பற்றி இங்கு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பயணத்தின் தேவை :
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு . இது ஔவை சொன்ன அமுதமொழி. சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பல நாடுகளைப் பார்க்கலாம். அங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், கோயில்கள், இயற்கைக் காட்சிகள், கவின்மிகு கலைப்பொருட்கள் இவற்றினைக் கண்டு ரசிக்கலாம்.

தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்வதும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரங்களையும் பற்றியும் அறிவுப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

தரைவழிப் பயணம்:
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிப்பது பயணம் ஆகும். பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து, இரு சக்கர வாகனம் இவற்றின் மூலம் பயணம் செய்வது தரைவழிப் பயணம் ஆகும். தரைவழிப் பயணம் ஏழை எளியவர், நடுத்தர வகுப்பினர், உயர் தர வகுப்பினர் யாவரும் பயன்படுத்தும் பயணம் ஆகும். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் இப்பயணத்தில் நேரம் விரயமாகிறது. மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கடல்வழிப் பயணம்:
வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே. கப்பல்கள் மூலம் பொருட்கள் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கான ஆதாரங்கள் பட்டினப்பாலையில் தரப்பட்டுள்ளன. தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றை சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர். கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல்பயணம் மேற்கொண்டனர். கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

வான்வழிப் பயணம்:
மிக துரிதமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது வான்வழிப்பயணமே. வான்வழிப் பயணம் வந்த பிறகு கடல் வழிப்பயணம் குறைந்தது. கடல் வழிப் பயணத்தில் போக வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் ஆகும். வான்வழிப் பயணம் மூலமாக சில மணி நேரங்களில் போக வேண்டிய இடத்திற்கு போய் சேரலாம். மிக முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறையில் இருப்பவர்கள், வியாபாரிகள்; தொழிலதிபர்கள் போன்றோர் வேலை நிமித்தமாக இந்த வான்வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

முடிவுரை:
பயணம் மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் வந்து போகும் முக்கிய நிகழ்வு ஆகும். தரைவழிப் பயணத்தை யாவரும் பயன்படுத்துவர். கடல்வழிப்பயணத்தில் கனரகப் பொருள்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுகின்றன. தொழில் ரீதியாக வான்வழிப் பயணத்தைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 3

Answers:

இடமிருந்து வலம் 1. தந்தை , 2. அறிவியல், 4. தேர்வு, 19. குறிக்கோள்
மேலிருந்து கீழ் 1. தலைவர், 3. வியப்பு, 7. தொடக்கம், 12. நூறு
வலமிருந்து இடம் : 6. இடர், 8. உடல், 13. வரலாறு, 14. ஓசை
கீழிருந்து மேல் 5. முதல், 9. கட்டளை , 11. நாள், 15. மகிழ்ச்சி

கட்டங்களை நிரப்புக

குறிப்புகளை கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 7
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

  1. கடல் மற்றும் கடற்கரையின் தூய்மை காப்பேன்.
  2. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு தராத பொருள்களையே பயன்டுத்துவேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *