Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Students can Download Tamil Chapter 3.5 வழக்கு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மதிப்பீடு

1. பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3. அஞ்சு – இடைப்போலி
4. அரையர் – கடைப்போலி
Answer:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

குறுவினா

Question 1.
வழக்கு என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

Question 2.
தகுதி வழக்கின் வகைகள் யாவை?
Answer:
தகுதி வழக்கின் வகைகள்.
தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை

  • இடக்கரடக்கல்
  • மங்க லம்
  • குழூஉக்குறி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது – இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
Answer:
இத்தொடரில் இடம் பெற்றுள்ள போலிச் சொல் நஞ்சுவிட்டது.
அதன் சரியான சொல் ‘நைந்து’

கற்பவை கற்றபின்

Question 1.
மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து தொகுக்க.
Answer:
முதற்போலி :

அகரம் ஐகாரத்தை ஒத்திருத்தல் :
(i) பசல் – பைசல்
(ii) வயிரம் – வைரம்
(iii) மஞ்சு – மைஞ்சு
(iv) மயல் – மையல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

நகரத்திற்கு ஞகரம் :

(i) நயம் – ஞயம்
(ii) நான் – ஞான்

மகரத்திற்கு நகரம் :

(i) முப்பது – நுப்பது
(ii) முனை – நுனை

இடைப்போலி :

(i) அமச்சன் – அமைச்சன்(அ – ஐ)
(ii) அரயன் – அரையன் (அ – ஐ)
(iii) நேசம் – நேயம் (ச-ய)
(iv) என்ப ர் – என்ம ர் (ப-ம் )
(v) ஐந்நூறு – ஐஞ்நூறு (ந -ஞ)
(vi) அசல் – அயல் (ச – ய)

கடைப்போலி :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 1
முற்றுப்போலி :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 2

இலக்கணப்போலி : முன்பின் தொக்கப் போலி
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 3

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.

Question 1.
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை………….. எனப்படும்.
Answer:
வழக்கு

Question 2.
…………… என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம்.
Answer:
வாயில்

Question 3.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் …………… இடம் மாறி வருவதையே குறிக்கும்.
Answer:
முன்பின் பகுதிகள்

Question 4.
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ……………
Answer:
இடக்கரடக்கல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 5.
மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் ………..
Answer:
மங்கலம்

விடையளி :

Question 1.
இயல்பு வழக்கு என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும்?
Answer:
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.

  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ .

Question 2.
இலக்கணமுடையது பற்றி எழுதுக.
Answer:
நிலம், மரம், வான், எழுது – ஆகிய சொற்கள், தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
இலக்கணப் போலி சான்றுடன் விளக்குக.
Answer:
இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னோர் முன்றில் என மாற்றி வழங்கினர். கிளையின் நுனியைக் கிளை நுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

எ.கா. புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்.

Question 4.
மரூஉ என்றால் என்ன?
Answer:
நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
எ.கா. கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 5.
தகுதி வழக்கு என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும்? அதன் வகைகளை விளக்குக.
Answer:

  1. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
  2. தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை
  3. இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

இடக்கரடக்கல் :

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
எ.கா. : கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது. ஒன்றுக்குப் போய் வந்தேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மங்க லம் :
செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பிட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

எ.கா. : ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
சுடுகாடு – நன்காடு

குழூஉக்குறி :

பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

எ.கா. : பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 6.
போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல்’ என்பதிலிருந்து தோன்றியது. போலி மூன்று வகைப்படும்.

Question 7.
முதற்போலி என்றால் என்ன?
Answer:
பசல் – பைசல், ஞ்சு – மைஞ்சு, யல் – மையல் ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.

Question 8.
இடைப்போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
(எ.கா) அச்சு – அமைச்சு
ஞ்சி – இலைஞ்சி
யர் – அரையர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 9.
கடைப்போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும். அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.

(எ.கா) அகம் – அறன்
நிலம் – நிலன்
முகம் – முகன்
பந்தல் – பந்தர்
சாம்பல் – சாம்பர்

Question 10.
முற்றுப்போலி என்றால் என்ன?
Answer:
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
(எ.கா) ஐந்து – அஞ்சு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மொழியை ஆள்வோம்

கேட்க.

Question 1.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
தேசியம் காத்த செம்மல்
Answer:
முன்னுரை :
தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.

பிறப்பு மற்றும் பெற்றோர் :
உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் நாள் பசும்பொன் என்ற ஊரில் இவர் பிறந்தார். பிள்ளைப் பருவத்திலேயே தாயை இழந்ததால் இவருக்கு இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் தாயாகப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவர்.

கல்வி :
தேவர், இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். அங்கு பிளேக் நோய் பரவியதால் கல்வி தடைப்பட்டது. எனினும் கேள்வி அறிவும் பட்டறிவும் பெற்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் மேடைகளில் பேசும் வல்லமை பெற்றார். எடுத்துக்காட்டாக, ஒருமுறை காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதைக் குறிப்பிடலாம். அனைவரும் அவருடைய பேச்சில் மயங்கினர். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சர்.சி.பி. இராமசாமி ஆங்கிலம் உலகை ஆள்கிறது. நம் தேவர் மூன்று மணிநேரம் ஆங்கிலத்தை அடக்கி ஆண்டார்’ என்று பாராட்டினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

அரசியல் : ‘
அரசியல் வாழ்வில் தேவர், மேன்மை பெற்று விளங்கினார். தமிழக்கத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து ஐந்து முறை வெற்ற வெற்றிகள் மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கைக் காட்டின. அவர் எப்போதும் ஓட்டு கேட்பதற்காகத் தொகுதிகளுக்குச் சென்றதில்லை. தொண்டு செய்வதற்காக மட்டுமே செல்வார்.

தேவர் வாழ்ந்த விதம் :
தேவர் விவேகானந்தரின் தூதராவும், நேதாஜியின் தளபதியாகவும், சத்திய சீலராகவும், முருக பக்தராகவும், ஆன்மீகப் புத்திரராகவும், தமிழ் பாடும் சித்தராகவும், தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராகவும், புலமையில் கபிலராகவும், இந்தியத் தாயின் நன்மகனாகவும் தேசியம் காத்த செம்மலாக வாழ்ந்தார்.

மனித குலத்தின் வழிகாட்டி :
மனித மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டார். இறப்பு என்பது எல்லா வகைகளிலும் வரலாம். அதாவது, பனை மரத்திலிருந்து விழுந்தவன் பிழைத்ததும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்தவன் இறந்ததும் உண்டு என்று கூறுவார். இவ்வகையில் சமயம், சமுதாயம் குறித்த இவருடைய சிந்தனைகள், மனித குலத்திற்கு வழிகாட்டுவனவாயின.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

முடிவுரை :
தெய்வத் திருமகனார் தேவர் அவர்கள் தம் பேச்சாற்றலால் இலக்கியப் பணி, சமுதாயப் பணி, அரசியல் பணி என அனைத்தையும் ஒரு சேரச் செய்தவர். 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் இவ்வுலகை விட்டு இவருடைய இன்னுயிர் பிரிந்தது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையவில்லை.

Question 2.
கப்பலோட்டிய தமிழர்
Answer:
முன்னுரை :
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ. உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமை காலம் :
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.

வெள்ளையர்களின் வீழ்ச்சி :
சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

சிறையில் தமிழ்ப்பணி :
சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும் பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம், இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :
வ.உ.சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார். விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

சொல்லக் கேட்டு எழுதுக

  1. அவன் எங்குள்ளான் என எனக்குத் தெரியவில்லை .
  2. வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  3. தெய்வீகத்தையும் தேசியத்தையும் தமது இரு கண்களாகக் கருதியவர்
    முத்துராமலிங்கத்தேவர்.
  4. தொல்காப்பியத்தைப் படித்துத் தொல்லையெல்லாம் மறந்தேன்.
  5. இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை 1. எழுவாய், 2. பயனிலை, 3. செயப்படுபொருள்.
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.

எடுத்துக்காட்டு:

  • நீலன் பாடத்தைப் படித்தான்.
  • பாரி யார்?
  • புலி ஒரு விலங்கு. இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.

ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

எடுத்துக்காட்டு :

  • கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • கரிகாலன் யார்?
  • கரிகாலன் ஒரு மன்ன ன்.

இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

எடுத்துக்காட்டு :

  • நான் கவிதையைப் படித்தேன்.
  • என் புத்தகத்தை எடுத்தது யார்?
  • நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.

இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படுபொருள்கள்.

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க

  1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்
  2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
  3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்கொடி பறந்தது.
  4. திருக்குறளை எழுதியவர் யார்?
  5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 9
Answer:

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 4

எழுதிய புலவர் குறிஞ்சிப்பாட்டை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 10
Answer:

  1. சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான்.
  2. மன்னர் நல்லமுறையில் நாட்டை ஆண்டார்.
  3. குழந்தை பழத்தைத் தின்றது.
  4. மாணவர்கள் பாடத்தைப் படித்தனர்.
  5. ஓவியர் ஓவியத்தை வரைந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

நான் விரும்பும் தலைவர்

திரு.வி. கல்யாணசுந்தரனார் :

முன்னுரை :

திரு.வி.க. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் விருத்தாசலம், சின்னம்மா. இவரின் முன்னோர்கள் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.

இளமைக் காலம் :

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை இராயப்பேட்டையில் வெஸ்லி பள்ளியில் பயின்றார். நான்காம் வகுப்பு படிக்கும் போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் படிப்பு தடைப்பட்டது.
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.

கதிர்வேற்பிள்ளை என்பவரிடம் தமிழும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் கேட்டறிந்தார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும் ஜஸ்டிஸ் சதாசிவராவ் அவர்களின் தொடர்பால் ஆங்கில அறிவையும் பெற்றார்.

விடுதலை இயக்கம் :

விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களைப் பொங்கி எழச் செய்தார். அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரையாற்றினார். காந்தியடிகள் சென்னையில் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருடைய அரசியல் குரு திலகர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

தமது பேச்சால் தமிழ் வளர்த்தவர். திரு.வி.க. நடை என்றே ஒரு தனிநடையை நடைமுறைப்படுத்தும் அளவுக்குப் பேசுவது போலவே எழுதுவது; எழுதுவது போலவே பேசுவது என்னும் முயற்சியில் வெற்றி கண்டவர். பிணிக்கும் தகைவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர். அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை உணர்ச்சிமிகு பேச்சினால் தம்பால் ஈர்த்து மேடைத்தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்த வர். திரு.வி.க.

முடிவுரை :

செய்யுள் நூல்கள், உரைநடை நூல்கள் எனப் பல நூல்களை இயற்றியுள்ளார். தேசபக்தன் , நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டவர்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு + கு + சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 11

Question 1.
மாடு புல் கொடுத்தார்
Answer:
மாடு + கு + புல் கொடுத்தார் – மாட்டுக்குப் புல் கொடுத்தார்.

Question 2.
பாட்டு பொருள் எழுது
Answer:
பாட்டு + கு + பொருள் எழுது – பாட்டுக்குப் பொருள் எழுது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
செடி பாய்ந்த நீர்
Answer:
செடி + கு + பாய்ந்த நீர் – செடிக்குப் பாய்ந்த நீர்.

Question 4.
முல்லை தேர் தந்தான் பாரி.
Answer:
முல்லை + கு + தேர் தந்தான் பாரி – முல்லைக்கு தேர் தந்தான் பாரி.

Question 5.
சுவர் சாந்து பூசினான்.
Answer:
சுவர் + கு + சாந்து பூசினான். – சுவருக்குச் சாந்து பூசினான்.

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 5
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 6

அகம் என முடியும் சொற்களை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 12
Answer:

(எ.கா.) நூலகம்

1. உணவகம்
2. காப்பகம்
3. மருந்தகம்
4. இனிப்பகம்
5. அடுக்ககம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக
(எ.கா) திருக்குறள் ங பால்களைக் கொண்டது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 13
Answer:
1. எனது வயது கஉ
2. நான் படிக்கும் வகுப்பு
3. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
4. திருக்குறளில் கந அதிகாரங்கள் உள்ளன.
5. இந்தியா க கூ ச எ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 14
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 15
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 7

  1. மூதறிஞர் – இராஜாஜி
  2. வீரமங்கை – வேலுநாச்சியார்
  3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
  4. வெள்ளையரை எதிர்த்த தீரன் – சின்னமலை
  5. கொடி காத்தவர் – திருப்பூர் குமரன்
  6. எளிமையின் இலக்கணம் – காமராசர்
  7. தில்லையாடியின் பெருமை – வள்ளியம்மை
  8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
  9. பாட்டுக்கொரு புலவன்- பாரதியார்
  10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
  11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
  12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சிநாதன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
2. தலைவர்களின் அரிய பண்புகளை உணர்ந்து பின்பற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *