Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள்: 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
(அ) அரும்புஆ
(ஆ) மலர்
(இ) வீ
(ஈ) செம்மல்
Answer:
(இ) வீ

Question 2.
கூத்தராற்றுப்படை என்ற நூலில் ……………….. அடிகள் உள்ளன.
(அ) 383
(ஆ) 483
(இ) 583
(ஈ) 683
Answer:
(இ) 583

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 3.
தொகைநிலைத் தொடர்……………. வகைப்படும்.
(அ ) மூன்று
ஆ) நான்கு
(இ) ஐந்து
(ஈ) ஆறு
Answer:
(ஈ) ஆறு

Question 4.
”மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு
(அ) உத்திரமேரூர்
(ஆ) மண்டகப்பட்டு
(இ) சின்னமனூர்
(ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
(இ) சின்னமனூர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 5.
“தர்க்கத்திற்கு அப்பால் ” சிறுகதை அமைந்த தொகுப்பு…….
(அ) ரிஷிமூலம்
(ஆ) யுகசந்தி
(இ) குருபீடம்
(ஈ) ஒரு பிடி சோறு
Answer:
(ஆ) யுகசந்தி

Question 6.
மணிப்பால் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்…….
(அ) ஜெயச்சந்திரன்
(ஆ) வேணுகோபாலன்
(இ முத்தையா
(ஈ) சாத்தப்பன்
Answer:
(ஆ) வேணுகோபாலன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 7.
வேற்றுமைத் தொகையில் வேற்றுமை உருபு……………….. வரும்.
(அ) வெளிப்படையாக
(ஆ) மறைவாக
(இ முதலில்
(ஈ) கடைசியில்
Answer:
(ஆ) மறைவாக

Question 8.
செய்குதம்பிப் பாவலரின் அனைத்து நூல்களும்………… ஆக்கப்பட்டுள்ளது.
(அ) அரசுடைமை
(ஆ) மக்களுடைமை
(இ) நாட்டுடைமை
(ஈ) பொதுவுடைமை
Answer:
(ஈ) பொதுவுடைமை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 9.
‘மலர்க்கை என்பதனை உருவகமாக்கினால் …….. ………. என வரும்.
(அ) பண்புத்தொகை
(ஆ) உம்மைத்தொகை
(இ) வினைத்தொகை
(ஈ) அன்மொழித்தொகை
Answer:
(இ) வினைத்தொகை

Question 10.
மூன்று காலங்களுக்கும் பொருந்துமாறு அமைவது…… …..ஆகும்.
(அ) பண்புத்தொகை
(ஆ) உம்மைத்தொகை
(இ) வினைத்தொகை
(ஈ) அன்மொழித்தொகை
Answer:
(இ) வினைத்தொகை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 11.
முல்லைப்பாட்டு ………. பாவால் இயற்றப்பட்டது.
(அ) வெண்பா
(ஆ) ஆசிரியப்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(ஆ) ஆசிரியப்பா

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
நின்று காவல் நெறி பூண்டு நெறியல்லது நினையாது தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர் கட்குயிராகியும் விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

12. இப்பாடலில் வந்துள்ள எதுகையை குறிப்பிடுக.
(அ) தந்தை , மைந்தர்
(ஆ) நின்று, நினையாது
(இ) மைந்தரில், மைந்தரால்
(ஈ) தயாரிகி, கட்குயிராகி
Answer:
(அ) தந்தை , மைந்தர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 13.
இப்பாடலில் இடம் பெற்ற உறவு முறை யாது?
(அ) மாமன், அத்தை
(ஆ) சித்தன், சித்தி
(இ தந்தை, தாய்
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ தந்தை, தாய்

Question 14.
மைந்தரில்லாத – பிரித்து எழுதுக.
(அ) மை + தரி + இல்லாத
(ஆ) மைந்து + இல்லாத
(இ) மைந்தர் + இல்லாத
(ஈ) மைந்தரி + இல்லாத
Answer:
(இ) மைந்தர் + இல்லாத

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 15.
இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
(அ) மெய்க்கீர்த்தி
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) காலக்கணிதம்
(ஈ) நீதி வெண்பா
Answer:
(அ) மெய்க்கீர்த்தி

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் காலக்கணிதம் ஆகும்.
(ஆ) நூலின் பயன். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
Answer:
விடை:
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் என்ன?
(ஆ) நூலின் பயன் எத்தகையது?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 17.
கவிஞர் சச்சிதானந்தனின் தமிழ்ப்பசியை எழுதுக.
Answer:
‘சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்” என்றார். “சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்பதே கவிஞர் சச்சிதானந்தனின் தமிழ்ப்பசி ஆகும்.

Question 18.
பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப்பட்டார்?
Answer:
பாரதியார் ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத் தந்தை’ ‘பாட்டுக்கொரு புலவன்’
எனப் பாராட்டப்பட்டார்.

Question 19.
“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
Answer:
பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்? இவ்வடியில் கழிந்த பெரும் கேள்வியினான். குசேல பாண்டியன் காதல்மிகு கேண்மையினான். இடைக்காடனார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 20.
தோற்பாவைக் கூத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
தோற்பாவைக் கூத்தின் வேறு பெயர்கள்

  • கையுறைப் பாவைக் கூத்து
  • பொம்மலாட்டம் ஆகும்.

Question 21.
‘இன்மையின்’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5×2 = 10]

Question 22.
உவமையைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைக்க
கண்ணினைக் காக்கும் இமை போல?
Answer:
என் தாயைக் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்தேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 23.
பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
Answer:
”கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை, குணங் குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ ”

  • கம்பன்
  • உமறுப்புலவர்
  • ஆசுகவி
  • காசிம் புலவர்
  • குணங்குடியார்
  • செய்குதம்பிப்புலவர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 24.
அறுசுவை – தொகைச் சொல்லைப் விரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக.
Answer:
இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு – (சா)

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:

  • Devotional Literature – பக்தி இலக்கியம்
  • Folk Literature – நாட்டுப்புற இலக்கியம்

Question 26.
கீழ்க்காணும் மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடர் அமைத்து எழுதுக.
Answer:
ஆறப்போடுதல் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முடிவுகளை உடனே எடுக்கக்கூடாது. ஆறப்போடுதல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 27.
பொருத்தமான நிறுத்தக்குறிகளை இடுக.
Answer:
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள் என இடைக்காடனார் கூறினார் போலும்.

விடை : ”கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்’ என இடைக்காடனார் கூறினார் போலும்.

Question 28.
உரைத்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
உரைத்த = உரை + த் + த் + அ
உரை – பகுதி
த் – சந்தி
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2×3 = 6]

Question 29.
படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துக்கலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 image - 1
Answer:
பரதநாட்டியம் :
1. பரதநாட்டிய வளர்ச்சிப் பற்றி எழுதுக.
பழமையான கலைகளுள் ஒன்றாகும் பெண்கள் மட்டும் ஆடும் கலையாக இருந்தது. இன்று ஆண்களும், பெண்களும் ஆடும் கலையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

2. பரத நாட்டியம் எவ்வகை கலையாகக் கருதப்படுகிறது?
இறைவனுக்கு உகந்த கலையாகப் பரதநாட்டியம் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

கரகம் :
1. கரகம் என்பது எத்தகைய நடனம்?
கரகாட்டம் என்பது கிராமிய நடனம் ஆகும். ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடும் ஆட்டம் ஆகும்.

2. கரகாட்டத்தின் வேறு பெயர் என்ன?
கரகாட்டம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

Question 30.
பல்துறை வளர்ச்சியின் மொழிபெயர்ப்பின் பங்கு என்ன?
Answer:

  • மொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை.
  • தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் தான் வளர்ச்சி பெறுகின்றன.
  • விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.
  • திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன.
  • இதனால் புதுவகையான சிந்தனைகள் மொழிக்கூறுகள் பரவுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம். அது தானாகக் கற்றுக் கொள்ளக்கூடியது. இந்த அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப்போல, தானே முடிவெடுக்கும் திறனுடையது.

ஒளிப்படங்கள், எழுத்துக்கள், காணொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் இயல்புடைய கனகா கானை மென்பொருளை ஆராய்ச்சியாளர் வடிவமைக்கிறார். அவ்வாறு கற்றுக் கொண்டதை அந்த இயந்திரம் தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரங்களில் செயல்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை; செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும், கேட்கவும், புரிந்துக்கொள்ளவும் முடியும் என்பதே அதன் சிறப்பு. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

(அ) செயற்கை நுண்ணறிவு என்பது யாது?
Answer:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.

(ஆ) மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு வடிவமைக்கின்றனர்?
ஒளிப்படங்கள், எழுத்துக்கள், காணொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கின்றனர்.

(இ) செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது?
Answer:
பார்க்கவும், கேட்கவும், புரிந்துக் கொள்ளவும் முடியும்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 x 3 = 6]

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 32.
மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
Answer:
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார் வித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

உன் காற்றே உடலுக்கு நல்லது. தூய்மையானது. அதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Question 33.
முகம்மதுரஃபி ஆசிரியர் குறிப்பு வரைக?
Answer:

  • முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “அருளைப் பெருக்கி ” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய்
இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று
– கா.ப. செய்குதம்பிப் பாவலர்

(அல்லது)

(ஆ ) “அன்னை மொழியே” எனத் தொடங்கும் பாடல்.
Answer:
அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [283 = 6]

Question 35.
சிறுபொழுது ஆறு கூறுகள் யாவை?
Answer:

  • காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
  • நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை
  • எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
  • லை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  • யாமம் – இரவு 10 மணி முதல் 2 மணி வரை
  • வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 36.
‘பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்’ இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 image - 2

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 37.
நிரல்நிறை அணி என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.
Answer:
நிரல் = வரிசை ; நிறை = நிறுத்துதல் பார்த்த சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பாடலின் பொருள்: இல்வாழ்க்கை அன்பும், அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். அணிப்பொருத்தம். இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால், இது நிரல் நிறை அணி ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
(அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர் மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மழை பொழியும் காட்சி :
வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோ கொண்டு , வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முதிய பெண்கள் நற்சொல் கேட்டு நின்ற காட்சி:
முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சி:
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர் தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள்.

இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முடிவுரை:
முல்லை நிலத்தின் மழைப்பொழிவையும், முல்லை மலரும் நெல்லும் தூவி முதுபெண்டிர் தெய்வத்தை வழிபட்டதையும், விரிச்சி கேட்டதையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

(அல்லது)

(ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை, அறிக!

– கண்ணதாசன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

கருத்து:
நான் தான் காலக் கணிதன் கருப்படும் பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நல்லவர்கள் பலபேர் இருக்கின்றனர். பொன்னும் விலைமிகு பொருளும் இருக்கிறது. அது செல்வம், இதுசரி, இது தவறு என்று சொல்வது என் வேலை செய்வது தவறாயின் எதிர்ப்பது என் வேலை சரி என்றால் புகழ்வது என் தொழில். ஆக்கல் காத்தல், அழித்தல் இம்மூன்றும் இறைவனும் நானும் மட்டுமே அறிந்த தொழில்களாகும்.

எதுகை: செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
கவிஞன், புவியில்

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
கவிஞன், காலம், கணிதம், கருப்படு

முரண் : சரி தவறு x ஆக்கல் x அழித்தல்

சொல் நயம்: கவிஞன் யானோர் காலக்
கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

என்ற சொற்றொடர்களை அமைத்துப் பாடலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.

(எ.கா.) தெய்வம் எனத் தன்னைக் கூறும் கவிஞர் புகழுடைத் தெய்வம் என்ற சொற்றொடரைக் கையாளும் நயம் படித்து இன்புறத்தக்கது. பொருள் நயம்: ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை என்றும் ஆழ்ந்த பொருள் சுவை உடையது (எ.கா) தன் செல்வம் எது எனக் கூற வந்த கவிஞர் பொன் விலை உயர்ந்தது. அதைக் காட்டிலும் விலை உயர்ந்த கவிதைப்பொருளே என் செல்வம் எனக் கூறியிருக்கும்.

இக்கவிதையின் பொருள் நயம் போற்றுதற்குரியது.

Question 39.
(அ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து சொல்வோருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைக் குறிப்பிட்டு, புதிய மின்விளக்குகள் பொருத்தும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

விழுப்புரம்,
18.05.2019.

அனுப்புநர்
பொது மக்கள்,
பூந்தோட்டம்,
விழுப்புரம் – 05.

பெறுநர்
மின்வாரிய இயக்குநர்,
மின்வாரிய அலுவலகம்,
பூந்தோட்டம்,
விழுப்புரம்-05.
ஐயா,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பொருள்: தெரு விளக்கு பழுதுநீக்கித் தருமாறு விண்ணப்பம் அளித்தல் – சார்பு. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வாழ்கிறார்கள். தெருக்களில் விளக்குகள் ஒளி வழங்குவது இல்லை. அதனால் தெருக்களில் நாய்கள் படுத்து உறங்குவது தெரியாமல் மிதித்து விடுகின்றனர். அதனால் நாய்கள் தெரு வழியே செல்வோரைக் கடித்துவிடுகின்றன. நாய் கடியினால் வருந்துவோர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

தெரு விளக்குகள் இயங்காமையால் தெருவில் நடந்து செல்வோர், விபத்துக்கும் ஆளாகின்றனர். தவிர முகமூடிக் கொள்ளையர் தொடர்ச்சியாக வீடுகளில் புகுந்து திருடிச் செல்கின்றனர். உயிர்க் கொலையும் செய்கின்றனர். தெரு விளக்குகளை விரைவாகச் சீர்செய்து எங்கள் துன்பத்தைப் போக்க ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி

இங்ஙனம்,
உங்கள் உண்மையுள்ள,
பொதுமக்கள்.

பூந்தோட்டம்,
4.4.2019.
உறைமேல் முகவரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பெறுநர்
மின்வாரிய இயக்குநர்,
மின்வாரிய அலுவலகம்,
பூந்தோட்டம்,
விழுப்புரம்-05.

அல்லது)

(ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர் –
தெ. தண்டபாணி,
35, மேற்கு மாடவீதி,
மதுரை – 625001.

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625003.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டி விண்ணப்பம். ஐயா,

வணக்கம்.

இந்த ஆண்டு பொங்கல் விழா எங்கள் ஊரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன. அதன் தொடர்பாக நான் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரையைத் தங்களின் நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
இடம் : மதுரை
தேதி 2.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
தெ. தண்டபாணி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

குறிப்பு
இத்துடன் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.
உறைமேல் முகவரி

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625003.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற நான்கு தொடர்களில் எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 image - 3
Answer:
வறியவர்க்கு ஒன்று ஈவது ஈகை
மறித்துக் கொடுக்காமல் தடுப்பது தீமை
முடிந்ததைக் கொடுப்பது மேதை
முடிந்ததைத் தடுப்பது பேதை
வாடி நிற்கும் வறியவர்க்குக் கொடுப்பது புகழ்
கொடுப்பதைத் தடுத்து நிறுத்துவது இகழ்
பாத்தாள் –

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 41.
கீழ்க்காணும் படிவத்தை நிரப்புக.
Answer:

நூலக உறுப்பினர் படிவம்

மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் மைய நூலகம்.

உறுப்பினர் சேர்க்கை அட்டை)
அட்டை எண் – உறுப்பினர் எண் 567

  • பெயர் – கந்தன்
  • தந்தை பெயர் – ஆறுமுகம்
  • பிறந்த தேதி – 06.06.2005
  • வயது – 14
  • படிப்பு – பத்தாம் வகுப்பு
  • தொலைபேசி எண் – 98678 64590
  • முகவரி – 35 அம்மன் கோயில் தெரு

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) 5 வது தெரு, மேலவீதி, மதுரை – 625002.

அ. கந்தன் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 100 சந்தா தொகை ரூ. 100 ஆக மொத்தம் ரூ 200 ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம் : மதுரை
நாள் : 24.5.2019

தங்கள் உண்மையுள்ள
அ. கந்தன்

திரு திருமதி செல்வி / செல்வன் அ. கந்தன் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

அலுவலக முத்திரை

தீபா
பிணைப்பாளர் கையொப்பம்
(பதவி மற்றும் அலுவலகம்)
(மாநில மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள், உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற
உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 42.
அ நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன்பயில்பவருடனோ, உடன் பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது……. இந்தச் சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம், கைகலப்பில் ஈடுபடுகிறோம். இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 image - 4 Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 image - 5

(அல்ல து)
மொழிபெயர்க்க.
Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

விடை: சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

பகுதி – V (மதிப்பெண்கள் : 24) 

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
Answer:
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே –
கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முன்னுரை:
இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது எங்கும் நிறைந்திருப்பது உயிர்களின் உயிர் மூச்சுக் காற்றைக் கண்களால் காண முடியாது. மெய்யால் மட்டுமே உணரக்கூடியது காற்று நம்மை மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல் எனப்படுகிறது. கோவா மக்களை கரைக்கதை மாதிரி வினாத்தாள் -4 – 71

தென்றல் காற்று :
தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் காற்று எனப்படுகிறது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறது. இந்த மென்காற்றை இளந்தென்றல் என்பர்.

இலக்கியத்தில் தென்றல்:
தென்றல் காற்று பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால் இளங்கோவடிகள் ” வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என நயம்பட உரைக்கிறார். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்னும் சிற்றிலக்கியத்தில்.

“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

என தென்றலை பெண்ணொருத்தி அன்போடு அழைக்கிறாள்.

கண்ணதாசனின் கவிதை நயம்:
முழுவதும் மலராத மலர் மணத்தையும் அழகையும் கூட்டி வைத்திருக்கும். அம்மலரைப்போல வளரும் கண்ணின் வண்ணமே எனவும் விடிந்தும் விடியாத குளிர்ந்த காலை நேரத்தில் தோன்றிய கலை அன்னமே எனவும், நதியில் விளையாடி கொடிகளில் பாய்ந்து தலை சீவி தவழ்ந்து நடந்து வருகின்ற இளம் தென்றலே எனவும், பொதிகை மலையில் அகத்தியரால் வளர்க்கப்பட்டு மதுரை தமிழ் சங்கங்களில் அழகாய் வளர்ந்த தமிழே எனவும் குழந்தையைக் கண்ணதாசன் பாடுகிறார்.

முடிவுரை:
இவ்வாறாக இலக்கியப் படைப்புகளிலும் திரையிசைப் பாடல்களிலும் தென்றல் காற்று இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளது. மென்துகிலாய் உடல் வருடி மாயங்கள் செய்வது தென்றல் காற்றேயாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

(அல்லது)

(ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக. நிகழ்கலை வடிவங்கள் நிலைக்குமா?!
Answer:
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன ஆடல், பாடல், இசை , நடிப்பு ஒப்பனை உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவை தாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்வை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன. உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன. மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.

நிகழ்கலைகளை வளரச் செய்வோம். என்றும் அழியாமல் நிலைக்கச் செய்வோம்.

Question 44.
(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. கதைக்கரு : கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம்.
Answer:
கதைமாந்தர்கள் :

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள்
  • அன்னமய்யா
  • மணி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக் கூறுகிறது.

கிராமத்து காட்சி :
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார். கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யா கண்ட காட்சி :
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று, கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல் :
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம், உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான்.

பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா

(அல்லது)

(ஆ) மங்கையராய்ப் பிறப்பதற்கே….. எனும் தலைப்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி பற்றிய உனது கருத்தை சுருக்கமாக எழுதுக.
Answer:
முகில் நாச்சி (எம். எஸ். சுப்புலட்சுமி):
எம். எஸ். சுப்புலட்சுமி தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா. அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர், காற்றினிலே வரும் கீதமாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர், இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் எம். எஸ். சுப்புலட்சுமி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

தாழம்பூ குங்குமமிட்ட மலர்ச்சியான முகம், புன்னகை தவழ… நீலப்பட்டுப்புடவையின் ஒளியில் … வெள்ளிக்கம்பிகள் மின்னுவதுபோல் தலைமுடியில் இடையிடையே வெள்ளை முடி… கையில் ஒலி வாங்கி…. தம்புரா சுருதி கூட்ட ராகமாலிகாவில் குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா…. என்று இசைத்தார்.

வீணைக் கலைஞரான அவரின் தாயே அவருக்கு முதல் குரு. பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தவர். இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் தன்னை வளர்த்துக் கொண்டவர். ஐந்தாம் வகுப்பு வரைதான் கல்வி பயில வாய்ப்புக் கிட்டியது. பதினேழு வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றவர்.

அவருக்கு மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அது அவரது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள பலரின் பாராட்டுகளையும் பெற்றார். காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஜவஹர்லால் நேரு , சரோஜினி நாயுடு போன்ற பெரியோர்களால் பாராட்டப்பட்டவர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

ஒருமுறை காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது ‘இரகுபதி இராகவ இராஜாராம்’ என்ற பாடலைப் பாடினார். அவரைப் பாராட்டிய அண்ணல், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார். பின் சிறிது நாள்களில் முனைந்து அந்தப் பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தார். சென்னை வானொலி, 1947 இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று அப்பாடலை ஒலிபரப்பியது. அப்பாடல் ஹரிதும் ஹரோ’ என்னும் மீரா பஜன்.

1954 இல் அவர் தாமரையணி விருது பெற்றபோது, தன்னைத் தொட்டுத் தடவிப் பாராட்டிய பார்வையிழந்த ஹெலன் கெல்லரை தன்னால் மறக்கமுடியாது என்கிறார். 1963இல் இங்கிலாந்திலும் 1966இல் ஐ.நா. அவையிலும் பாடினார். இதே ஆண்டில் அவரின் குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.

1974 இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது அவர் இசைக்குக் கிடைத்த மகுடம். இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞராகவும் ஆனார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கூடப் பாடியுள்ளார். இந்தியா, மிக உயரிய விருதான இந்திய மாமணி’ விருதளித்து அவரைச் சிறப்பித்தது.

அவருடைய பல இசைக் கக்சேரிகள் ஏதாவது ஒரு அமைப்பின் நன்கொடைக்காக நடந்தவை என்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட
தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும்.
Answer:
எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா தந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து இவற்றையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்துகளைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்’ என்னும் பழைமையுடைய செந்தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி’ என்று வரையறுத்தவர் பரிதிமாற் கலைஞர் என்று பலராலும் போற்றப்படும் வி. கோ.

சூரிய நாராயண சாஸ்திரியார் ஆவார். அகத்தியர் வளர்த்த தமிழ்’ பொதியமலைத் தமிழ் போன்ற தொடர்கள் தமிழின் பழைமையை விளக்கும் சான்றுகளாகும். உயர் தனி, செம்மை என்ற மூன்று அடைமொழிகள் கொண்டு தமிழ் விளங்கக் காரணம் என்ன என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பொருளுரை தொன்மை :
குமரிக்கண்டம் எனப்பட்ட லெமூரியாக் கண்டத்திலுள்ள மக்கள் பேசிய மொழி தமிழ் என்பது எலியர் கருத்து. மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போது தோன்றியது தமிழ் உலக மொழிகளுள் பழைமையும் இலக்கிய இலக்கண வளமும் உடையவை கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபு, சமஸ்கிருதம், தமிழ் என்பன. பிற மொழிகள் காலவெள்ளத்தில் சிதைந்து மாறுபட்டு விளங்குகின்றன. பத்தாயிரம் ஆண்டு கட்டு முன்பே பேசப்பட்டும், இன்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் சிறப்பான தன்மை தமிழ் மொழிக்கு அமைந்த பண்பு எனலாம்.

உயர்மொழி :
தான் பேசப்படும் நாட்டிலுள்ள பலமொழிகளுக்கும் தலைமையும், அவற்றைவிட மேன்மைத்தன்மையும் உள்ள மொழியே, உயர்மொழி எனப்படும் என்று கூறுவார் பரிதிமாற்மலைஞர். இதன்படி பார்த்தால் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்கு எல்லாம் தலைமையும் மேன்மையும் பெற்றிருப்பதால் தமிழ் உயர்மொழியே ஆகும்.

தமிழ் – தனிமொழி:
தான் வழங்கும் நாட்டிலுள்ள மற்றைய மொழிகளின் உதவியில்லாமல் தனித்தியங்க வல்ல ஆற்றலுடைய மொழி ‘தனிமொழி’ எனப்படும். பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், பிற மொழிகள் தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் காணப்படுவது நம் தமிழ்மொழியில் மட்டுமே. பிற மொழிகளின் உதவி இல்லாமல் தனித்தியங்கும் ஆற்றல் பெற்றிருப்பதால் தமிழ் மொழி ‘த எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

தமிழ் – செம்மொழி :
‘திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகம் பெற்ற தூய்மொழி புகல் செம்மொழியாகும்’ என்பது செம்மொழியின் இலக்கணம். இவ்வரையறை தமிழ் மொழிக்கும் பொருந்துகிறது. தமிழ் மொழியினுள் இடர்ப்பட்ட சொல் முடிவுகளும், தெளிவற்ற பொருள் முடிவுகளும் இல்லை. சொல்லையும் சொல்லுபவன் கருதிய பொருளைக் கேட்பவன் தெளிவாக உணர முடியும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைத் தமிழ்மொழி இன்றளவும் ஏற்றிருப்பதால் ‘தமிழ் செம்மொழி

ஆகும். தமிழின் பொதுப்பண்பு:
மேலநாட்டு அறிஞர்களான போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றவர் தமிழினைக்கற்று இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர். மதம், மொழி, இனம், நிறம், கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முதல் முழக்கமிட்டது தமிழ் மொழியே ஆகும். உண்பது அமிழ்தமே ஆயினும் தனியராய் உண்ணோம் என்று உணர்த்தினவர் தமிழர்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே போன்ற உயர்ந்த சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தியது தமிழ் இல்வாழ்வையும், புறவாழ்வையும் அகம், புறம் என்று பிரித்து குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலம் வகுத்து, முதல், கரு, உரிப்பொருள் வகுத்து இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பியது நம் செந்தமிழ் மொழியாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

அரசின் கடமை :
மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழைச் செம்மொழியாக அறிவித்தால் பிற நாட்டவர் தமிழ்மொழியைப் பயில்வர். நம் செந்தமிழ் இலக்கியம், இலக்கணம் பிற மொழியாளர்களால் ஆராயப்படும். தமிழ் உலகம் முழுவதும் ஏற்றம் பெற்று புதிய நூல்கள் ஆக்கம் பெறும். உலக அளவில் உயரிய மதிப்பு கூடும். மொழிக் களஞ்சியங்களில் தமிழ்க்கலை வெளிப்படும். முடிவுரை.

தமிழைச் செம்மொழி ஆக்கியதோடு மட்டுமன்றி வணிகத் துறையை எட்டிப்பிடித்துச் செல்வ மொழியாகவும் மாற்றிட வழிவகை செய்ய வேண்டும்.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி சாரணர் இயக்கம் குறித்து கட்டுரை எழுதுக. முன்னுரை – இயக்கம் – சின்னம் – பழக்கம் – பயிற்சிகளும் வழிமுறைகளும் – ஆக்கம் முடிவுரை.

முன்னுரை:
குருவியின் தலையில் பனம் பழமா! என்று எண்ணாது சின்னஞ்சிறு மீன்கள் கூட்டம் நினைத்தால் ஒரு கப்பலையே மூழ்கடித்து விடும் என்பதே சாரண இயக்கத் தத்துவமாகும். இவ்வியக்கத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேடன் பவுல் (1857 – 1941) என்பவர் தோற்றுவித்தார்.

ஒரு சமயம் தென்னாப்பிரிக்காவுக்கும் போயருக்கும் இடையிலான போரில் லெப்டினண்ட்டாக விளங்கினார். போர்க்காலத்தில் சின்னஞ்சிறுவர்களுக்கு (12-17) பயிற்சி கொடுத்தால் முதலுதவி போன்றவை செய்யலாமே என்று எண்ணி சிந்தனையோடு நில்லாமல் செயலிலும் இறங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

சிறுவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்குப் பறவை, விலங்கு இவற்றின் பெயர்களிட்டு போர்க்களத்தில் செல்லும் முறை, முதலுதவி செய்தல், ஒற்றாடல் போன்ற பயிற்சியளித்தார். பயிற்சிகளுக்குப்பின் சிறுவர்களின் விரைவான செயலாக்கமும், கூர்த்த மதியும் பெருமளவு பயனைத் தந்தது.

போருக்குப் பின்பு தன்னுடைய பதவியைத் துறந்து ‘சிறுவர் சாரணியம்’ என்றும் நூலை எழுதினார். 1908ல் மாணவர்களுக்கான சாரண இயக்கத்தையும், 1910ல் மாணவியருக்கான சாரணிய இயக்கத்தையும் தோற்றுவித்தார்.

இயக்கம் :
இந்தியாவில் இதனைக் கொண்டுவரும் பொருட்டு அன்னி பெசண்ட் அம்மையார் (1847 – 1933) அவர்கள் 1917ல் சாரண – சாரணிய இயக்கத்தைக் கொண்டு வந்தார். மாணவர்களுக்கு இவ்வியக்கமானது ஒற்றுமையை, கடமை தவறாமையை, உதவி செய்தலை வளர்க்கும் என உறுதியாக நம்பினார். அந்நம்பிக்கை வீண்போகாது. இன்று சாரண இயக்கமானது உயரிய அளவில் விளங்குகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

சின்னம் :
ஒவ்வொரு இயக்கமும் தமக்கென ஒரு சின்னத்தோடு திகழும். சாரண இயக்கத்திற்கும் தனி சின்னம் உள்ளது. ஒவ்வொரு சாரண-சாரணியரும் அதனை அணிந்திருத்தல் அவசியமாகும். காக்கிச் சீருடையில் கழுத்தில் நீலநிற ஸ்கார்ஃப் அணிவர். ஸ்கார்ஃப்பானது கீழே விழாவண்ணம் பேட்ஜ் சொருகி வைத்திடுவர். மேலும் பெல்ட்டும், தொப்பியும், கேன்வாஸ் ஷூவும் அணிவது அவசியமாகும்.

பழக்கம் :
சாரணர் ஒருவரையொருவர் காணும் போது வலது கையால் வணக்கத்தைத் தெரிவிப்பர். அதுவும் சிறு விரலைப் பெரு விரலால் பிடித்து மூவிரலை நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிப்பது வழக்கம். மேலும் கை குலுக்கும் போது இதயத்தின் பிரதிபலிப்பாய் இடது கை கொண்டே கை குலுக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பயிற்சிகளும் வழிமுறைகளும்:
மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி தரப்படுகிறது. வெளியூர்களில் முகாமிட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுவதுண்டு. பயிற்சி பல்வேறு விதங்களில் அமைந்திருக்கும். முதலுதவி செய்தல், கயிறு ஏறுதல், மரம் நடுதல், வளாகங்களைச் சீர்படுத்துதல், சாலை விதிகளை அறிதல் எனப் பயனுள்ள வகைகளில் பயிற்சி பெறுவர். பல்வேறு நட்புகளை முகாம்களின் போது பெறுவர்.

பயிற்சியின் முடிவில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இவை நடத்தப்படும். போட்டிகளில் முதலில் வரும் மூவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படுகிறது.

ஆக்கம் :
பயிற்சி முடித்த சாரணர்கள் பயிற்சியுடன் நில்லாது தொண்டுகளும் புரிவர். விழாக்களில் மக்களை வழிநடத்தும் பணியிலும், சாலைகளைச் சீரமைக்கும் பணியிலும், ஊர்களில் மரங்களை நடுதலிலும், வளாகங்களைச் சுத்தப்படுத்துதலிலும் குழுவாகச் செயல்படும் இவர்களது பணியை அடுக்கிக் கொண்டே போகலாம்.

குழுவாக இல்லாமல் வீடுகளில் தனியாக இருந்தாலும் பிறருக்கு பாம்பு, தீ, தண்ணீர் இவற்றால் துன்பம் ஏற்படும்போது முதலுதவி செய்து காப்பாற்றவும் செய்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

முடிவுரை:
சாரணர் இயக்கம் சிறுவர்களுக்கான இயக்கமாக இருந்தாலும், அவர்களைச் சிகரங்களுக்கு அழைத்துச் செல்பவையாகும். ஒற்றுமையின் விளைநிலமாகத் திகழ்கின்றனர். இங்கு தூவப்படும் விதைகள் சமுதாய எழுச்சிக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை . வளரட்டும் சாரணர் இயக்கம். தொடரட்டும் அவர்களது பணிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *