Students can Download Tamil Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பெண்க ளுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
Answer:
அ) மயில்
Question 2.
பின்வருவனவற்றுள் மலை’ யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
Answer:
அ) வெற்பு
Question 3.
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) ஏடெடு + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
Answer:
இ) ஏடு + எடுத்தேன்
Question 4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
Answer:
அ) துயின்று + இருந்தார்
Question 5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …..
அ) என்று உரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
Answer:
ஈ) என்றுரைக்கும்
பொருத்துக
1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
Answer:
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3, பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்
குறுவினா
Question 1.
பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Answer:
வானம், நீரோடை, தாமரை மலர்கள், காடு, வயல், மேகம் முதலியன பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்களாகும்.
Question 2.
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் :
வாழ்வில் துன்பங்கள் நீங்கும்.
நெஞ்சில் தூய்மை உண்டாகும்.
வீரம் வரும்.
சிறுவினா
‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
Answer:
- வானமும், நீரோடையும், தாமரை மலர்களும் எங்களைக் கவிதையாக இயற்றுக என்றன.
- காடும், வயலும், மேகமும் கண்ணில் புகுந்து கவிதையாய் மாற முயற்சித்தன.
- ஆடும் மயிலுக்கு நிகரான பெண்கள் அன்பினைக் களிச்சித்திரம் ஆக்கக் கூறினர்.
- குளிர் தென்றலும், ஆடும் மயிலும், அன்னமும், சுடர்விடும் கதிரோனும், வேல் ஏந்திய வீரர்களும் தங்கள் அழகினை எழுதுங்கள் என்றனர்.
- இதற்கிடையில் அறியாமையால் துன்பப்படும் தமிழ்நாட்டு மக்களின் காட்சி என்னுள் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் கலந்தது.
- இத்துன்பம் நீங்கிட அனைவரும் இன்பத் தமிழ்க் கற்றவர் என்ற நிலை வர வேண்டும். அந்நிலையிலேயே துன்பம் நீங்கி, நெஞ்சில் தூய்மை உண்டாகி வீரம் வந்து சேரும் என்று இன்பத் தமிழ்க்கல்வி வழியே பாரதிதாசன் கூறுகிறார்.
சிந்தனை வினா
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகள் :
- தமிழ்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகள் மிகவும் ஆழமாகக் கல்வி கற்பார்கள்.
- மாணவர்களால் தாங்கள் கற்பதைப் பேசுவதுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
- சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதனால் எளிமையாகக் கற்க இயலும்.
- கற்கும் திறனைப் பெறுவார்கள்.
- சுய சிந்தனை வளரும்.
- எளிமையாக உரையாட முடியும்.
- கலந்துரையாடல், விவாதித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி இவற்றை எளிதாக எதிர்கொள்வார்கள்.
- தன்னம்பிக்கை வளர்கிறது.
கற்பவை கற்றபின்
Question 1.
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக,
Answer:
இயற்கை :
பூக்களின் வலி மலர்வதால் மறைகிறது
மூங்கிலின் வலி இன்னிசையால் மறைகிறது
மேகத்தின் வலி மழைத்துளியால் மறைகிறது
மனிதனே உன்வலி இயற்கையை நீ போற்றுவதால் மறைந்து விடும் மறவாதே
Question 2.
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் – 1 ; தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது’ என்பது என் கருத்து.
முதலில் நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். என்னவெனில் தாய்மொழியைக் கற்பது, தாய்மொழி வழி கற்பது ஆகிய இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாட்டை அறியாமலேயே வாதிட்டுக் கொண்டுள்ளோம்.
மாணவன் -2 : என்ன வேறுபாடு? தெளிவாகக் கூறு.
மாணவன் -1 : தாய்மொழியில் உள்ள இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை
பெறுவது தாய்மொழியைக் கற்றலாகும். தாய்மொழியின் வழியாய் அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தெளிவது தாய்மொழி வழிக் கற்றலாகும்.
மாணவன் – 2 : பிறமொழியில் கற்பதனால் என்ன இழப்பு எனக் கூறு?
மாணவன் -1 : தாய்மொழியின் வாயிலாகக் கற்பவன்தான் சுயமாகச் சிந்திக்கிறான். சிந்தனை ஆற்றலைப் பெறமுடியும். எண்ணியதை எண்ணியவாறு வெளிப்படுத்த முடியும். :
மாணவன் -2 : பிறமொழியைக் கற்றவனால் அம்மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்தபோது, சிந்திக்க முடியாதா?
மாணவன் -1 : கண்டிப்பாக முடியாது. எடுத்துக்காட்டாக “உனக்குப் பிடித்த ஒன்றைப்
பற்றிக் கூறு என்றால் அவன் முதலில் தன் தாய்மொழியில் சிந்தித்து விட்டுப் பிறகுதான் அவன் அறிந்த வேறுமொழியில் பதிலளிப்பான் – தாய்மொழி என்றால் உடனே பதிலளிப்பான். கல்விச் சிந்தனையாளர்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.
மாணவன் -2 : அப்படியென்றால்.
மாணவன் -1 : என்ன அப்படியென்றால் என்று இழுக்கிறாய்? உண்மையான கல்வியறிவைப் பெற வேண்டுமெனில் தாய்மொழி வழிக் கல்விதான் அவசியம். அவர்களால் மட்டுமே சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாளர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவாக முடியும்.
மாணவன் -2 : நீ சொல்வதும் சரிதான். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்,
சர்.சி.வி. இராமன் , கணிதமேதை இராமானுஜம் போன்றோர்களும் அவர்கள் தாய்மொழி வழியில் கற்றதனால்தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. இரவீந்தரநாத தாகூர் அவருடைய தாய்மொழியான வங்க மொழியில்தான் கீதாஞ்சலியை எழுதினார். மகாத்மாகாந்தியடிகள் அவருடைய சுயசரிதையைத் தம் தாய்மொழியில்தான் எழுதினார்.
மாணவன் -1 : சரியாகக் கூறினாய். நான் கூற வந்த செய்தியும் இதுதான். நீயே
கூறி விட்டாய். நாமும் நம் தாய்மொழி வழியிலே கல்வி கற்போம். சிறப்புறுவோம்! நன்றி!
கூடுதல் வினாக்கள்
சொல்லும் பொருளும் :
1. எத்தனிக்கும் – முயலும்
2. வெற்பு – மலை
3. கழனி – வயல்
4. நிகர் – சமம்
5. பரிதி – கதிரவன்
6. அன்னதோர் – அப்படி ஒரு
7. கார்முகில் – மழைமேகம்
8. துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்
நிரப்புக.
Question 1.
பரிதி என்பதன் பொருள்
Answer:
கதிரவன்
Question 2.
வெற்பு என்பதன் பொருள் ……….
Answer:
மலை
Question 3.
பாரதிதாசன் எழுதிய …………… என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
Answer:
பிசிராந்தையார்
விடையளி :
Question 1.
பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
- பாண்டியன் பரிசு
- அழகின் சிரிப்பு
- இசையமுது
- குடும்ப விளக்கு
- கண்ண கி புரட்சிக் காப்பியம்
- இருண்ட வீடு
பாடலின் பொருள்
கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம் பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.
சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.
ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும். வீரம் வரும்.